ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் -ஸ்வாமிகள் –ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் சுருக்கமான பொருள்
குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –
1- விஸ்வம் -மங்களமான குணங்களால் முழுதும் நிரம்பியவர் -all in one
2-விஷ்ணு -அனைத்துக்குள்ளும் நுழைந்து நீக்கமற நிறைந்து இருப்பவர் -one in all
3-வஷட்கார -அனைத்தையும் தாம் நினைத்தபடி நடத்தி தன் வசத்தில் வைத்து இருப்பவர் –
4- பூத பவ்ய பவத் ப்ரபு–முக்காலங்களில் உள்ளவர்களுக்கு எல்லாம் தலைவர் -ஸ்வாமி –
————————————–
தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்
5-பூதக்ருத் -தன் நினைவாலே அனைத்தையும் படைப்பவர் –
6-பூதப்ருத்–படைத்த அனைத்தையும் தானே தாங்குபவர் –
7- பாவ -பிரபஞ்சத்தையே தன்னை விட்டுப் பிரியாமல் சார்ந்து இருப்பதாகக் கொண்டவர் -மயிலுக்குத் தோகை போலே
8- பூதாத்மா -அனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவர் -அனைத்தும் அவருக்கு உடல்
9-பூத பாவன-அனைத்தையும் பேணி வளர்ப்பவர் -ஆகையால் அவரே ஸ்வாமி
——————————————
குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன் –
10-பூதாத்மா -தூய்மையானவர் –தமக்கு உடலாய் இருக்கும் சித் அசித் இவற்றின் குற்றங்கள் தீண்டாதவர்
11-பரமாத்மா -அனைவருக்கும் ஆத்மாவாக இருப்பவர் -தனக்கு ஒரு ஆத்மா இல்லாதவர் –
———————————————
முக்தர்களால் அடையத் தக்கவன் –
12- முக்தாநாம் பரமாம் கதி -முக்தர்கள் அடையும் இடமாய் இருப்பவர்
13-அவ்யய-யாரும் தம்மை விட்டு விலகாமல் இருப்பவர் –வைகுந்தம் அடைந்து திரும்புவது இல்லையே
14-புருஷ -முக்தர்களுக்கு தன்னையும் தன் குணங்களையும் பேர் ஆனந்தத்தோடு அனுபவிக்கக் கொடுப்பவர்
15-சாஷீ-மகிழும் முக்தர்களை நேரே கண்டு மகிழ்பவன் –
16-ஷேத்ரஜ்ஞ -முக்தர்கள் தம்மோடு மகிழும் நிலமான வைகுந்தத்தை அறிந்து இருப்பவர்
17-அஷர -முக்தர்கள் எத்தனை அனுபவித்தாலும் குணங்களால் குறையாதவன் –
—————————————————–
முக்திக்கு வழி –
18-யோக -முக்தியை அடையும் வழி உபாயமாகவும் இருப்பவர்
19-யோக -வேறு உபாயம் ஆகிற பக்தி யோகத்தை செய்பவர்களை வழி நடத்துபவர்
20- பிரதான புருஷேச்வர -மூல பிரக்ருதிக்கும் அதில் கட்டுண்ட ஜீவர்களுக்கும் ஸ்வாமி –
———————————————–
அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –
21- நாரசிம்ஹ வபு -நிகர் அற்ற நரம் கலந்த சிங்க உருவமாய்ப் பிறந்தவர் –
22-ஸ்ரீ மான் -ஒளி மிக்க -மனித -சிங்க உருவங்கள் பொருந்திய அழகிய திருமேனி உடையவர் –
23-கேசவ –இவ் வுருவில் அழகிய திருக் குழலும் பிடாரியும் உடையவர் –
24-புருஷோத்தம -பத்தர் முக்தர் நித்யர் -ஆகிய மூவகை ஆத்மாக்களை விட உயர்ந்தவர்
25- சர்வ -அனைத்துப் பொருள்களையும் தன் உடலாகக் கொண்டு அவற்றை நடத்துபவர் –
26-சர்வ -தன் உடலாக இருக்கும் அனைத்தின் தீமைகளையும் விலக்குபவர்-
27-ஸிவ -மங்களமாக இருப்பவர் –
28-ஸ்தாணு -அடியவர்களுக்கு நிலை நின்ற பயனைக் கொடுப்பதில் ஸ்திரமானவர் –
29-பூதாதி -அனைத்து பிராணிகளாலும் இறுதியான பயனாக அடையப் படுபவர் –
30-நிதிரவ்யய–எத்தனை பயன்படுத்தினாலும் அழியாத செல்வம் –
31-சம்பவ -புதையல் போலே மறைந்து இருந்து சரியான நேரத்தில் அடியார்களுக்காக அவதரிப்பவர் –
32-பாவன -அவதரிக்கும் போது அடியார்கள் துன்பங்களை நீக்கிக் காப்பவர் –
33-பர்த்தா -தன்னையே அழித்து தாங்குபவர்
34-பிரபவ -அவனை நினைந்தாலே பாபங்களைப் போக்கும் குற்றமற்ற சிறந்த பிறப்பை உடையவர் –
35-ப்ரபு -மனிதனான எளிய பிறப்பிலும் சிந்தயந்தி சிசூபாலன் போன்றோருக்கு முக்தி கொடுத்த மேன்மை உடையவர்
36-ஈஸ்வர -எளியவராக பிறந்த போதும் அனைவரையும் ஆள்பவர் –
37-ஸ்வயம்பூ -வினைகளின் பயனாகப் பிறவாமல் தன் கருணை மற்றும் விருப்பத்தினால் பிறப்பவர் –
38-சம்பு -தன் அழகாலும் பண்புகளாலும் அடியார்களுக்குப் பெருக்கு எடுக்கும் இன்பத்தை அளிப்பவர் –
39-ஆதித்ய -சூர்ய மண்டலத்தின் நடுவே இருப்பவர் -உருக்கிய தங்கம் போலத் திகழ்பவர் –
40-புஷ்கராஷ-தாமரைக் கண்ணன் -இதுவே முழு முதல் கடவுளுக்கு அடையாளம் –
41-மஹாஸ் வன -உயர்ந்த ஒலியை உடையவர் -அதாவது வேதங்களால் போற்றப் படுபவர் –
42-அநாதி நிதன-முதலும் முடிவும் அற்றவர் –
43-தாதா- -உலகைப் படைக்க முதலில் நான்முகனை தன் கர்ப்பமாகப் படைத்தவர் –
44- விதாதா -பிரமனாகிய கர்ப்பத்தை வளர்த்து உத்பத்தி செய்பவர் –
45-தாதுருத்தம -நான்முகனைக் காட்டிலும் உயர்ந்தவர் –
46-அப்ரமேய -புலன்களுக்கு அளவிட முடியாதவர் -தெய்வங்களுக்கும் அரியவர் –
47-ஹ்ருஷீகேச -அனைவருடைய புலன்களையும் ஆளும் தலைவர் -இன்பமும் நலமும் செல்வமும் பொருந்தியவர் –
48-பத்ம நாப -நான்முகனின் பிறப்பிடமான தாமரையை உந்தியில் உடையவர் –
49-அமரப் ப்ரபு -தெய்வங்களுக்கும் ஸ்வாமியாய் -அவர்களை சிருஷ்டி சம்ஹார தொழில்களில் நடத்துபவர் –
50-விஸ்வ கர்மா -பிரமனைப் படைப்பதற்கு முன்னும் பின்னும் அனைத்து செயல்களையும் செய்பவர் –
51-மநு -சங்கல்ப்பிப்பவர் -தன் நினைவின் சிறு பகுதியாலேயே பிரபஞ்சத்தைப் படைப்பவர் –
52-த்வஷ்டா -பிராணிகளை பெயரோடும் உருவத்தோடும் செதுக்குபவர் –
53-ஸ்தவிஷ்ட-விரிவானவர் -பிரளயத்தின் போது சூஷ்மமாக இருந்த சித் அசித் களான தனது உடலை படைப்பின் போது விவரிப்பவர்
54-ஸ்தவிர-எக்காலத்திலும் நிலைத்து இருப்பவர் -மாறுதல் இல்லாதவர் –
55-த்ருவ -தன் உடலையே படைப்பின் போது பிரபஞ்சமாக விரித்தலும் -இயற்க்கை நிலையில் மாறுதல் அற்றவர் –
56-அக்ராஹ்ய -யாருடைய உணர்த்தலுக்கும் அப்பால் பட்டவர் -புத்தியால் பிடிக்க முடியாதவர் –
57-சாஸ்வத -படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை விடாமல் தொடர்வதால் ஒய்வில்லாதவர்
58-கிருஷ்ண -முத் தொழில் விளையாட்டாலேயே இன்புறுவர்
59-லோஹிதாஷா–இவ் விளையாட்டாலாயே சிவந்த மலர்ந்த கண் உடையவர் –
60-பிரதர்தன -பிரளயத்தின் போது அனைத்தையும் அழித்து தன்னுள் ஒடுக்குபவர் –
61-ப்ரபூத -உலகமே அழிந்த போதும் நிலையான வைகுந்தச் செல்வத்தால் நிரம்பியவர்
62- த்ரிககுத்தாமா –லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரிய நித்ய விபூதி –
63-பவித்ரம் -குற்றம் அற்ற தூய்மை உடையவன் –
64-மங்களம் பரம் -தீமைகளுக்கு எதிரான சிறந்த மங்களங்களின் இருப்பிடம் –
65-ஈசான -பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவர் –
66-பிராணத–உயர் அளிப்பவன் -நித்ய சூரிகளுக்கு தன்னை அனுபவித்துத் தொண்டு புரிய சக்தியை அளிப்பவன்
67-பிராண -உயிர் அளிப்பவன் -நித்ய சூரிகளுக்கு உயிர் போலே பிரியமாய் இருப்பவர்
68-ஜ்யேஷ்ட -அனைத்துக்கும் முன்னானவன் -என்பதால் முதியவன்
69-ஸ்ரேஷ்ட -நித்யர்களால் ஸ்துதி செய்யப்படும் சிறந்தவர் –
70-பிரஜாபதி -நித்யர்களுக்கு பதியானவர் -அவர்கள் கைங்கர்த்யத்தை ஏற்றுக் கொள்பவர் –
71-ஹிரண்யகர்ப்ப -தூய சத்வமான பொன்னுலகம் என்னும் ஸ்ரீ வைகுந்தத்தில் வசிப்பவர் –
72-பூ கர்ப -தன் பூமா தேவியை கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் -ஸ்ரீ வராஹ நாயனாராக திருவவதரித்து கடலில் நின்றும் இடர்ந்து எடுத்தவர்
73-மாதவ -ஸ்ரீ மஹா லஷ்மியின் கணவர் -அவளை விட்டு ஷண நேரமும் பிரியாதவர் –
74- மது சூதன –மது என்னும் அசுரனை அழித்தவர்-அதே போலே அனைத்து தீமைகளையும் ஒழிப்பவர் –
75-ஈஸ்வர -தடங்கல் அற்ற ஆட்சி புரிபவர் -அனைத்து சங்கல்பங்களையும் முடிப்பவர் –
76-விக்ரமீ-மிக்க திறல் உடையவர் -எதிர்க்கும் அனைவரையும் ஒழிக்க வல்லவர் –
77-தன்வீ -சார்ங்கம் என்னும் வில்லைப் பிடித்த தன்னிகர் அற்றவர் —
78-மேதாவீ-தன் பெருமைக்குத் தக்க சர்வஜ்ஞ்ஞர் -சர்வஜ்ஞ்ஞர் –
79-விக்ரம-வேத வடிவமான கருடனை வாகனமாகக் கொண்டு தன் விருப்பப்படி செய்பவர் –
80-க்ரம-பரமபதத்தில் செழிப்பானவர் -எங்கும் நிறைந்து இருப்பவர் –
81- அநுத்தம–தனக்கு மேற்படி யாரும் அற்றவர் –
82-துராதர்ஷ -கடல் போலே ஆழமானவர் -ஆகையால் கடக்கவோ கலக்கவோ வெற்றி கொள்ளவோ முடியாதவர் –
83-க்ருதஜ்ஞ-செய் நன்றி அறிபவர் -நாம் செய்யும் சிறு பூசையையும் நினைவில் கொள்பவர் –
84-க்ருதி – அடியார்களை தர்மத்தில் தூண்டும் சக்தியாய் இருப்பவர் –
85-ஆத்மவான் -தர்மம் செய்யும் ஆத்மாக்களை தனக்குச் சொத்தாகக் கொண்டவர் –
86-சூரேச -தேவர்களுக்குத் தலைவர் -ப்ரஹ்மாதிகளையும் ஆட்சி செய்பவர்
——————————–
ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –
87-சரணம் -அனைவருக்கும் உபாயம் –தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர் –
88-சர்ம -ஸுக ரூபமானவர் –
89-விச்வரேதா-பிரபஞ்சத்துக்கு முதல் காரணமாக இருப்பவர் -உடலையும் புலன்களையும் தன் தொண்டுக்காகவே படைப்பவர் –
90-பிரஜாபவ -அவர் கொடுத்த உடலையும் புலன்களையும் கருவிகளாகக் கொண்டு அவரைச் சேரும்படி இருப்பிடமானவர்
91-அஹ-அவர்கள் தன்னைக் கிட்டுவதற்காக இடையூறாக இருக்குமவற்றை தானே விலக்குபவர் –
92- சம்வத்சர-அடியார்களைக் கை தூக்கி விட அவர்கள் உள்ளத்திலேயே
97–சர்வேஸ்வர -சரணாகதர்களை தகுதி பார்க்காமல் தாமே சடக்கென அடைபவர்
98-சித்த –தன்னை அடைவதற்கு வேறு வழிகள் தேவை இல்லாமல் தானே தயாரான வழியானவர் –
99-சித்தி -அனைத்து தர்மங்களாலும் அனைவராலும் அடைய படும் பயனாக இருப்பவர் –
100-சர்வாதி -உயர்ந்த மற்றும் தாழ்ந்த அனைத்துப் பயன்களுக்கும் மூலமாக இருப்பவர் –
101-அச்யுத -சரண் அடைந்தோர்களை விட்டு நீங்காதவன்
102-வ்ருஷாகபி -தர்மத்தின் உருவமாக ஸ்ரீ வராஹமாக பிறந்தவர்
103-அமேயாத்மா -தன் அடியார்களுக்கு எவ்வளவு செய்தார் என்று அளவிட முடியாதவர்
104-சர்வயோக வி நிஸ்ருத -அனைத்து உபாயங்களாலும் அடையப் படுபவர்
105-வசூ-சிறிது அன்பு காட்டுபவன் இடம் வசிப்பவர் –
106-வசூ மநா-பக்தர்களை விலை மதிப்பில்லாத செல்வமாகக் கொள்பவர் –
107-சத்ய -தன் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் –
108-சமாதமா -ஏற்றத் தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் –
109-சம்மித -அடியார்களுக்கு அடங்கியவர் –
110-சம -சரணம் அடைந்தவர்களுள் புதியவர் பழையவர் என்று வேறுபாடு பார்க்காதவர் –
111- அமோக -தன்னுடைய தொடர்பு வீணாகாதவன்-பக்தி வீணாவது இல்லை –
112-புண்டரீகாஷ – புண்டரீகம் என்னும் வைகுந்தத்தில் உள்ளோர்க்குக் கண் போன்றவர் –
113-வ்ருஷகர்மா -நம்மை நன்னெறிப் படுத்தும் தர்மமான செயல்களை உடையவர் –
114-வ்ருஷாக்ருதி -தர்மமே உருவானவர் -அமிர்தம் போன்ற குளிர்ந்த உரு உடையவர் –
115-ருத்ர -பக்தர்களை நெஞ்சு உருக்கி ஆனந்த கண்ணீர் விட வைப்பவர் –
116-பஹூ சிரா –ஆதி சேஷனைப் போலே எண்ணிறந்த தலைகளை உடையவர் –
117-பப்ரு -ஆதி சேஷ உருவில் உலகைத் தாங்குபவர் –
118-விஸ்வ யோனி -தம்மை அடைந்தவர்களை நெருக்கமாக கூட்டிக் கொள்பவர் —
119- சூசி ஸ்ரவா -தன் பக்தர்களின் இனிய தூய்மையான சொற்களைக் கேட்பவர் –
120-அம்ருத -முக்தி அளிக்கும் ஆராவமுதானவர் –
121- சாஸ்வதஸ் தாணு -தேவ லோகத்து அமுதம் போல அல்லாமல் நிலையானவர் –
122-வராரோஹா -மிகச் சிறந்த அடையும் பொருளாக இருப்பவர் –
——————————————————————
ஆறு குணங்கள் –
123- மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
126-பா நு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-
———————————————–
மூவரின் முத் தொழில்கள் –
129-வேத -வேதங்களை அளிப்பவர்-
130-வேதவித் -வேதத்தின் ஆழ் பொருளை ஐயம் இன்றி அறிபவர் –
131-அவ்யங்க-சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்கிற வேத ஆறு அங்கங்களால் குறைவற்றவர் –
132-வேதாங்க -வேதத்தை தனக்கு திருமேனியாக உடையவர் –
133-வேதவித் -வேதத்தைக் கொண்டு அறியப்படுபவர் -வேத தர்மங்களை கடைப்பிடிக்கச் செய்து அதனால் அடையப் படுபவர் –
134-கவி -அனைத்தையும் எதிர் காலச் சிந்தனையோடு பார்ப்பவர் –
135-லோகாத்யஷ-தர்மத்தைச் செய்யும் தகுதி உள்ள மனிதர்களை அறிபவர் –
136-சூ ராத்யஷ -அவர்களால் பூசிக்கப் படும் தேவர்களை அறிபவர் –
137-தர்மாத்யஷ-வழி முறைகளான தர்மங்களையும் அறிபவர் -அதற்கு உரிய பயனை அறிந்து கொள்பவன் –
138-க்ருதாக்ருத -இவ் உலக மற்றும் அவ் உலக பயன்களை அளிப்பவன் –
——————————————————
நால்வரின் நான்கு தன்மைகள் –
139-சதுராத்மா -வசூதேவ சங்கர்ஷண பிரத்யும்னன் அநிருத்தர் -என்று நான்கு உருவங்களை உடையவர் –
140-சதுர்வ்யூஹ-விழிப்பு கனவு நிலை ஆழ்ந்த உறக்கம் முழு உணர்தல் -ஆகிய நான்கு நிலைகளிலும் இருப்பவர் –
141-சதுர் தம்ஷ்ட்ர -பரவாசூ தேவ உருவத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -இது மஹா புருஷ லஷணம்-
142-சதுர்புஜ -பர வாஸூ தேவ உருவத்தில் நான்கு கைகளை உடையவர் –
143-ப்ராஜிஷ்ணு -தன்னை உபாசிப்பவர்களுக்கு ஒளி விடுபவர் –
144-போஜனம் -பக்தர்களால் இனிய உணவாக இன்பமாக அனுபவிக்கப் படுபவர் –
145-போக்தா -பக்தர்கள் சமர்ப்பிக்கும் அமுதம் போன்ற பாயசம் முதலானவற்றை அன்போடு ஏற்று உண்பவர் –
146-சஹிஷ்ணு -தன் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களைப் பொறுப்பவர் –
———————————————————————
ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –
147-ஜகதாதிஜா -மும் மூர்த்திகளில் நடுவான ஸ்ரீ மஹா விஷ்ணுவாகப் பிறப்பவர் -ஜகதாதிஜா -ஜகதாதி பூதாஸூ த்ரிமூர்த்திஸூ அன்யத் மத்வேன ஜாதமிதி
148-அநக -சம்சாரத்தில் பிறந்தாலும் குற்றம் அற்றவர் -ஏவம் ஜன்ம சம்சார மத்யே ஜநித்வாஅபி அநக பாப பிரதி ஸ்பர்சி
149-விஜய -வெற்றியே உருவானவர் -மற்ற இரண்டு மூர்த்திகளும் தம் தம் செயல்களில் வெற்றி பெறச் செய்பவர்
மூர்த்யந்தியோர் அபி -சிருஷ்டி சம்ஹார பிர் ஜகத் விஜய யஸ்மாதி இதி விஜய
150-ஜேதா-மற்ற இருவரையும் தன் நினைவின் படி நிறுத்துபவர் –
151-விஸ்வ யோனி -படைத்தல் காத்தல் அழித்தல் -ஆகிய முத் தொழில் களாலும் உலகுக்குக் காரணமாக இருப்பவர் –
152-புனர்வசூ -நான்முகன் முதலான தேவர்கள் இடம் அந்தர்யாமியாக வசிப்பவர் –
—————————————————————–
ஸ்ரீ வாமன அவதாரம் –
153-உபேந்திர -இந்த்ரனுக்குத் தம்பி -அதிதி தேவியின் பன்னிரண்டாவது மகன்
154-வாமன -குள்ளமானவர் -தன்னை தர்சிப்பவர்களுக்கு தன் திருமேனி அழகால் சுகம் அளிப்பவர் –
155-ப்ராம்சூ -உயரமானவர் -உடனே வளர்ந்து -த்ரிவிக்ரமனாக உலகையே அளந்தவர் –
157-சூசி -தூய்மை யானவர் -தான் செய்யும் உதவிகளுக்கு பதில் உதவி பாராதவர் –
158-வூர்ஜித -மஹா பலியின் மகனான நமுசி என்பானை அடக்கிய சக்தி படைத்தவன் –
159-அதீந்திர -இந்தரனுக்கு இளையவன் ஆனாலும் தன் செயல்களால் அனைத்துக்கும் மேம்பட்டவர் –
160-சங்க்ரஹ – மெய்யன்பர்களால் எளிதில் அறியப் படுபவர்
161-சர்க – -த்ரிவிக்ரம அவதாரம் செய்து தன் திருவடியை அடியார்களுக்காகப் பிறப்பித்தவர் –
162-த்ருதாத்மா -தன்னையே கொடுத்து அடியார்களைத் தாங்குபவர் –
163-நியம -தன் அடியார்களின் பகைவர்களை அடக்குபவர் –
164-யம -தன் அடியார்களின் இடையூறுகளை விலக்கி அருளுபவர் -அந்தர்யாமியாக இருப்பவர் –
——————————————————————————-
அவதரித்துக் காப்பவன் -இனியவன் –
165-வேத்ய -எளியவனாக பிறக்கிறபடியால் அனைவரின் புலன்களாலும் அறியக் கூடியவர் –
166- வைத்ய-அடியார்களுக்கு பிறவியை போக்கும் விதையை அறிந்தவர் –
167-சதாயோகீ–அடியார்களைக் காக்க எப்போதும் விளித்து இருப்பவர் –
168-வீரஹா -தீய வாதங்களால் மக்களை பகவான் இடத்தில் இருந்து பிரிக்கும் வலிமையை உடையவர்களை ஒழிப்பவர்
169-மாதவ -பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் –
170-மது -மெய்யடியார்களுக்கு தேன் போன்று இனிமையானவர்
———————————————————————-
பொதுவான கல்யாண குணங்கள் –
171-அதீந்த்ரிய -அறிவை அளிக்கும் புலன்களுக்கு எட்டாதவர் –
172-மஹா மாய -தன்னை சரணம் அடையாதவர்களுக்கு அறிய ஒண்ணாத மாயையை உடையவர் –
173-மஹோத்சாஹ-மிக்க ஊக்கம் உடையவர் –
174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
178-மஹாத் யுத்தி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –
179-அநிர்தேஸ்யவபு -நிகரற்ற விளக்க ஒண்ணாத திருமேனியை உடையவர் –
180-ஸ்ரீ மான் -தன் திருமேனிக்கித் தகுந்த ஆபரணச் செல்வத்தை உடையவர் –
181-அமேயாத்மா -கடலைப் போலே ஆழமாய் அளவிட முடியாதவர் –
——————————————————————————————
குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –
182-மஹாத் ரித்ருத் -பாற் கடலைக் கடையும் போது மந்த்ரம் என்னும் பெரிய மலையைத் தாங்கினவர் –
183-மகேஷ்வாச -சார்ங்கத்தைத் தாங்கி சிறந்த பாணங்களை எய்பவர் –
184-மஹீபர்த்தா -பூமியை எளிதில் தாங்குபவர் –
185- ஸ்ரீ நிவாச -பாற் கடலில் இருந்து வெளிப்பட்ட திருமலைத் தன் திருமார்பில் ஏந்துபவர் –
186-சதாம் கதி -பக்தர்களான சாதுக்களுக்கு கதியானவர் –
187-அநிருத்த-அடியார்களைக் காக்கும் போது இடையூறுகளால் தடுக்க முடியாதவர் –
—————————————————
ஹம்சாவதாரம் –
188-சூரா நந்தா -தேவர்களின் ஆபத்தை போக்கி மகிழ்ச்சியை கொடுப்பவர் –
189-கோவிந்த -தேவர்கள் செய்யும் ஸ்துதிகளை பெறுபவர் –
190-கோவிதாம் பதி – வேத வாக்குகளை அறிந்தவர்களுக்கு தலைவர் –
191- மரீசி -கண் இழந்தோர்க்கும் தன்னை வெளிப்படுத்தும் இழிக்கீற்று ஆனவர் –
192-தமன -தன் ஒளியினால் சம்சார வெப்பத்தை அடக்குபவர் –
193-ஹம்ஸ-தூய அன்னமாக அவதரித்தவர் –
194-சூபர்ண–சம்சாரக் கடலில் இருந்து கரை சேர்க்கும் அழகிய சிறகுகளை உடையவர் –
————————————————-
பந்த நாப அவதாரம் -உந்தித் தாமரை யான் –
195-புஜ கோத்தம-பாம்புகளுக்குள் சிறந்தவர் -ஆதி சேஷனுக்குத் தலைவர் –
196-ஹிரண்ய நாப -பொன் போன்ற உந்தியை உடையவர் –
197-சூதபா–தன்னிடத்தில் க்ரஹிக்கப்பட்ட அனைத்தையும் அறிபவர்
198-பத்ம நாப -உந்தியில் எட்டு இதழ்களோடு கூடிய தாமரையை உடையவர் –
199-பிரஜாபதி -பிரமன் முதலிய அனைவர்க்கும் தலைவர் –
——————————————–
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் –
200-அம்ருத்யு -ம்ருத்யு தெய்வத்துக்கே பகைவர் -மரணத்தை ஒத்த ஹிரண்யனுக்கு விரோதி –
201–சர்வத்ருத் -நண்பர்கள் பகைவர்கள் நாடு நிலையாளர் ஆகிய அனைவரையும் சமமாகப் பார்ப்பவர் –
202-சிம்ஹ -பெரிய நரசிம்ஹ வடிவம் உடையவர் –
203- சந்தாதா -ஹிரண்யனை அழிக்கும் காலத்திலேயே பக்த பிரகலாதனை சேர்த்துக் கொண்டவர் –
204-சந்திமான் -தன் அடியவர்களோடு தன் சேர்க்கை நீங்காமல் இருப்பவர் –
205-ஸ்திர-பக்தர்கள் இடம் வைத்த அன்பில் அவர்கள் குற்றத்தையும் பொறுத்து விலகாமல் இருப்பவர் –
206-அஜ -தூணில் பிறந்த படியால் இயற்கையான பிறப்பு இல்லாதவர் –
207-துர்மர்ஷண-பகைவர்களால் தன் பார்வையைத் தாங்க முடியாமல் இருப்பவர் –
208-சாஸ்தா -தீயவர்களைத் தண்டிப்பவர் –
209-விஸ்ருதாத்மா -வியந்து கேட்கத்தக்க நரசிம்ஹ அவதார திரு விளையாட்டுகளை உடையவர் –
219-சூராரிஹா -தேவர்களின் பகைவரான ஹிரண்யனை அழித்தவர் –
———————————————————–
ஸ்ரீ மத்ஸயவதாரம் –
211- குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –
221-க்ராமணி-பக்தர்களை வைகுந்தத்தில் இருக்கும் நித்யர்கள் இடமும் முக்தர்கள் இடமும் அழைத்துச் செல்பவர் –
222-ஸ்ரீ மான் -தாமரைக் கண்களையே செல்வமாக உடையவர் -மீன் தன் குட்டிகளை கண்களாலே பார்த்து வளர்க்கும் –
223-நியாய -தன் பக்தர்களுக்கு எது சரியோ அத்தைச் செய்பவர்
224-நேதா -பக்தர்களின் கார்யங்களை நடத்துபவர் -தான் மீனாகி கடலுள் புகுந்து அடியார்களைக் கரை ஏற்றியவர் –
225-சமீரண- பக்தர்களுக்கு இனிமையான திரு விளையாடல்களை உடையவர் –
————————————————————
புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –
226-சஹச்ர மூர்தா –ஆயிரம் -எண்ணற்ற -தலைகளை உடையவர் –
227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –
228-சஹஸ்ராஷ -எண்ணற்ற கண்களை உடையவர் –
229-சஹஸ்ரபாத் -எண்ணற்ற திருவடிகளை உடையவர் –
230-ஆவர்த்தன -சம்சாரச் சக்கரத்தை சுழற்றுபவர் -கால சக்ரம் -உலக சக்ரம் -யுக சக்ரம் -ஆகியவற்றை சுழற்றுபவர் –
231-நிவ்ருத்தாத்மா -பிரக்ருதியைக் காட்டிலும் மும்மடங்கு பெருத்த நித்ய மண்டலத்தை உடையவரானபடியால் மிகச் சிறந்த ஸ்வரூபம் உடையவர் –
232-சம்வ்ருத -பிரக்ருதியின் தமோ குணத்தால் அறிவு இழந்தவர்களுக்கு மறைந்து இருப்பவர் –
233-சம்ப்ரமர்த்தன -தன்னை உபாசிப்பவர்களுக்குத் தமோ குணமாகிய இருட்டை ஒழிப்பவர் –
234-அஹஸ் சம்வர்த்தக -நாள் பஷம் மாதம் முதலான பிரிவுகள் உடைய கால சக்கரத்தை சுழற்றுபவர் –
235-வஹ்நி- எங்கும் உள்ள பரம ஆகாச உருவத்தில் பிரபஞ்சத்தையே தாங்குபவர்
236- அநில- பிராண வாயுவாக இருந்து யாவரும் வாழும்படி செய்பவர் –
237-தரணீதர-தன் சங்கல்பத்தாலேயே பூமியைத் தாங்குபவர் –
238-சூப்ரசாத -தன்னை வேண்டியவர்களுக்காக அனைத்து பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவர்
239-பிரசன்னாத்மா -நிறைவேறாத ஆசையே இல்லாத படியால் நிறைந்த மனம் உள்ளவர் –
240-விஸ்வஸ்ருக் -ஜீவர்களின் குற்றம் பெறாமல் கருணையே காரணமாக உலகைப் படைப்பவர் –
241-விஸ்வ புக் விபு -ஒரே காப்பாளானாக உலகில் எங்கும் பரவி இருப்பவர் –
242-சத்கர்த்தா – மெய்யன்பர்களைப் பூசிப்பவர் –
243-சத்க்ருத -சபரி முதலான சாதுகளால் பூசிக்கப் படுபவர்
244-சாது -அடியார்கள் விரும்பிய படி தூது போவது தேர் ஓட்டுவது ஆகியவற்றைச் செய்பவர் –
245-ஜஹ்நு-பொறாமையும் பகைமையும் உள்ளோருக்குத் தன்னை மறைப்பவர் –
246-நாராயண -அழியாத நித்யமான சித் அசித் கூட்டத்துக்கு இருப்பிடம் ஆனவர் -அந்தர்யாமி யானவர் -‘
247-நர -தன் உடைமையாகிய சித் அசித்துக்களை அழியாமல் இருக்கப் பெற்றவர் –
——————————————————————
யானே நீ என்னுடைமையும் நீயே —
248-அசங்க்யேய-எண்ணிரந்தவர்-உடைமைகள் எண்ணிரந்தபடியால் –
249-அப்ரமேயாத்மா -எண்ணிரந்த பொருட்களின் உள்ளும் புறமும் வியாபிக்கிற படியால் அளவிட முடியாதவர் –
250-விசிஷ்ட -எதிலும் பற்று இல்லாதபடியால் -அனைத்தையும் விட உயர்ந்தவர் –
251-சிஷ்டக்ருத் -தன் அடியார்களை நற்பண்பு உடையவர்களாக ஆக்குபவர் –
252-சூசி -தானே தூய்மையாக இருந்தவர் -தன்னை அண்டியவர்களைத் தூய்மை யாக்குபவர் –
253-சித்தார்த்த -வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர் –
254-சித்த சங்கல்ப -நினைத்தது எல்லாம் நடத்தி முடிக்கும் பெருமை உள்ளவர் –
255-சித்தித-எட்டு திக்குகளையும் யோகிகளுக்கு அருளுபவர்
256-சித்தி சாதன -இவரை அடைவிக்கும் வழியான பக்தியே இனிதாக உடையவர் –
257-வ்ருஷாஹீ -அவனை அடையும் நாளே நன்னாளான தர்மமாக இருப்பவர் –
258-வ்ருஷப – சம்சார தீயால் சுடப் பட்டவர்களுக்கு அருள் என்னும் அமுதைப் பொழிபவர் –
259-விஷ்ணு -அருள் மழையாலேயே எங்கும் இருப்பவர் –
260-வ்ருஷபர்வா -தன்னை அடைவதற்கு தர்மங்களைப் படிக்கட்டாக உடையவர் –
261- வ்ருஷோதர -தன் வயிறே தர்மமானவர் -அடியார்கள் அளிக்கும் நைவேத்யத்தால் வயிறு நிறைபவர் –
262-வர்தன -தாய் போலே தன் வயிற்றிலே வைத்து அடியார்களை வளர்ப்பவர் –
263-வர்த்தமான –அடியார்கள் வளரும் போது தானும் மகிழ்ந்து வளர்பவர் –
264-விவிக்த -மேற்கண்ட செயல்களால் தன்னிகர் அற்றவர் –
265-ஸ்ருதி சாகர -நதிகளுக்கு கடல் போலே -வேதங்களுக்கு இருப்பிடமானவர் –
266-சூபுஜ-அடியார்களின் சுமையைத் தாங்கும் மங்களமான தோள்கள் உடையவர் –
267-துர்தர -கடல் போலே தடுக்க முடியாத வேகம் உடையவர் –
268-வாக்மீ–வேத வடிவமான சிறந்த வாக்கை உடையவர் -வேதங்களால் துதிக்கப் படுபவர் -இனிமையாகப் பேசுபவர் –
269-மஹேந்திர-நிகரற்ற அளவிட முடியாத -அனைவரையும் ஆளும் செல்வம் உடையவர் –
270-வசூத-குபேரனைப் போலே பொருட்செல்வத்தை விரும்புவோருக்கு அதை அருளுபவர் –
271-வசூ -ஆழ்வார்கள் போன்றோர்களுக்கு தானே செல்வமாக இருப்பவர்
———————————————————————————————-
பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –
272-நைக ரூப -பல உருவங்களை உடையவர் –
273-ப்ருஹத் ரூப -ஒவ்வொரு உருவமும் பிரபஞ்சத்தையே வியாபிக்கும் பெரியோனாய் இருப்பவர் –
274-சிபிவிஷ்ட -ஒளிக் கீற்றுக்குள் நுழைந்து அனைத்தையும் வ்யாபிப்பவர் -சூரிய ஒளியைப் போலே உடலில் நுழைபவர்
275-பிரகாசன -காணக் கருதும் பக்தர்களுக்கு தன்னைக் காட்டுபவர் –
276-ஓஜஸ் தேஜோத் யுதிதர -வலிமை சக்தி ஒளி ஆகியவற்றை உடையவர் –
277-பிரகாசாத்மா -அறிவு இழந்தவர்களுக்கும் தனித்தன்மையோடு புலப்படும் தன்மை உடையவர் –
278-பிரதாபன -பகைவர்களுக்கு வெப்பத்தை உண்டாக்குபவர் –
279-ருத்த -பௌர்ணமிக் கடல் போலே எப்போதும் நிறைந்து இருப்பவர் –
280-ஸ்பஷ்டாஷ-தன் பெருமையை வெளிப்படுத்தும் வேதச் சொற்களை உடையவர் –
281-மந்திர -தன்னை நினைப்பவரைக் காப்பவர் –
282-சந்த்ராம்சூ -த்யானிப்பவரின் களைப்பை ஒழிக்கும் நிலவின் குளிர்ந்த ஒலியை உடையவர் –
283-பாஸ்கரத்யுதி–பகைவர்களை ஓட்டும் சூர்யனைப் போன்ற ஒளி படைத்தவர் –
284-அம்ருதாம் சூத்பவ -குளிர்ந்த நிலவின் ஒளிக்குப் பிறப்பிடமானவர்-
285-பானு -சூரியனுக்கே ஓளியை அருளும் பிரகாசம் உடையவர் –
286-சசபிந்து -தீயோர்களை எளிதில் நீக்குபவர்
287- சூரேச்வர–நல் வழிச் செல்பவர்களே தேவர்கள் -அவர்களுக்குத் தலைவர் –
288-ஔஷதம் -சம்சாரம் என்னும் -கொடிய நோயைத் தீர்க்கும் மருந்து –
289-ஜகதஸ் சேது -உலகில் நல்லவைகள் தீயவைகளை பிரிக்கும் அணை போன்றவர் –
290-சத்ய தர்ம பராக்கிரம -உலகை வாழ்விக்கும் தர்மத்தை -திருவிளையாடல் -பண்புகள் உடையவர் –
291-பூத பவ்ய பவன் நாத –மேற்கண்ட பெருமையை முக்காலத்திலும் உடையவர் –
292-பவன -காற்று போலே எங்கும் செல்பவர் –
293-பாவன -தூய்மை அளிக்கும் கங்கைக்கும் தூய்மை அளிப்பவர் –
294-அநல -தன் அடியார்க்கு எத்தனை கொடுத்தாலும் போதும் என்ற மனம் இல்லாதவர் –
295-காமஹா -தன்னையே வேண்டுபவர்களுக்கு உலக இன்ப ஆசையை ஒழிப்பவர் –
296-காமக்ருத்-அவரவர் விருப்பப்பட்ட பலனைக் கொடுப்பவர் –
297-காந்த -தன் மென்மையான திருமேனி அழகாலே காண்பவரை ஈர்ப்பவர் –
298-காம -வண்மை எளிமை ஆகிய குணங்களால் அனைவராலும் விரும்பப் படுவார்
299-காமப்ரத -நிலையற்ற செல்வத்தையும் நிலையான தன்னையும் வேண்டியவற்றை அளிப்பவர் –
300-ப்ரபு -மேற்சொன்ன சிறப்புகளால் காண்பவர்களின் கண்ணையும் மனத்தையும் பறிப்பவர் –
—————————————————————————
ஆலமா மரத்தின் இல்லை மேல் ஒரு பாலகன் –
301-யுகாதிக்ருத் -பிரளயத்தின் போது உலகத்தை தன் வயிற்றில் வைத்துக் காத்து பின் யுகங்களுக்குத் தொடக்கமான சிருஷ்டியைச் செய்பவர் –
302-யுகாவக்த -நான்கு யுகங்களையும் அதன் அதன் தர்மங்களோடு திரும்ப திரும்ப வரச் செய்பவர் –
303-நைக மாய -சிறு குழந்தையாக உலகை விழுங்குவது -ஆலிலையில் துயில்வது முதலான பல வியப்புகளை உடையவர் –
304-மஹாசன-உலகையே விழுங்கும் பெரும் தீனி உள்ளவர்
305-அத்ருச்ய-மார்கண்டேயர் முதலிய ரிஷிகளுக்கும் எட்டாதவர்
306-வ்யக்தரூப -ஆனால் மார்க்கண்டேயர் வேண்டிய போது தன் திருமேனியைப் புலப்படுத்துபவர் –
307-சஹஸ்ரஜித் -ஆயிரம் யுகங்கள் உள்ள பிரளயத்தை யோக உறக்கத்தாலே ஜெயிப்பவர்
308-அனந்தஜித் -தன் பெருமையின் எல்லையை யாராலும் காண முடியாதவர் –
309-இஷ்ட –310-அவிசிஷ்ட -தன் வயிற்றில் இருக்கும் அனைவராலும் தாய் போலே விரும்பப் படுபவர்
311-சிஷ்டேஷ்ட-சான்றோர்களால் அடையப்படும் பொருளாக விரும்பப் படுபவர் –
312-சிகண்டீ-தன் மகிமையை தனக்கு ஆபரணமாக உள்ளவர் –
313- ந ஹூஷ-தமது மாயையினால் ஜீவர்களை கட்டுப் படுத்துபவர் –
314-வ்ருஷ-அடியார்களை அமுதம் போன்ற திருமேனி ஒளியாலும் சிறப்பாலும் மகிழ்விப்பவர் –
——————————————————–
பரசுராமரா -அல்லது கோபத்தின் உருவமா –
315-க்ரோதஹா-ஷத்ரியர்களை 21 தலைமுறைகளை அழித்த பின் கோபத்தை ஒழித்தவர்-
316-க்ரோதக்ருத்-முதலில் ஷத்ரியர்கள் இடம் கோபம் கொண்டவர் –
317-கத்தா -தன் கோபத்தைத் தூண்டிய கார்த்த வீர்யனை ஜெயித்தவர் –
318-விஸ்வ பாஹூ-தீயோர்களை அழிப்பதால் உலகுக்கு நன்மை செய்யும் கைகளை உடையவர் –
319-மஹீதர-சுமையாக இருக்கும் தீயவர்களை ஒழித்து பூமியைத் தாங்குபவர் –
320-அச்யுத -பிறக்கும் போதும் ஏனைய தேவர்களைப் போலே தன் மேன்மை நிலையில் இருந்து இறங்காதவர் –
321-பிரதித -பெரும் புகழாளர் –
322-பிராண -அனைத்து ஜீவர்களுக்கும் மூச்சுக் காற்றானாவர்
——————————————————
அனைத்தையும் தாங்கும் ஆமை –
323-பிராணத -பாற் கடல் கடைந்த போது தேவர்களுக்கு வலிமை கொடுத்தவர் –
324-வாசவாநுஜ-விரும்பிய அமுதைப் பெற இந்தரனுக்கு தம்பியாகப் பிறந்தவர் –
325-அபாம் நிதி – கடல் கடையப்பட்ட போது அதற்கு ஆதாரமாகத் தாங்குபவர் –
326-அதிஷ்டானம்-அப்போதே மத்தான மந்திர மலையை மூழ்காமல் தாங்கியவர் –
327-அப்ரமத்த-அடியார்களைக் காப்பதில் விழிப்புடன் இருப்பவர் –
328-ப்ரதிஷ்டித -வேறு ஆதாரம் வேண்டாத படி தன்னிடத்திலேயே நிலை பெற்று இருப்பவர் –
329-ஸ்கந்த -அசூரர்களையும் தீயவர்களையும் வற்றச் செய்பவர் –
330-ஸ்கந்த தர -தேவ சேனாதிபதியான சூப்ரஹமண்யனையும் தாங்குபவர் –
331- துர்ய -உலகு அனைத்தையும் தாங்குபவர் –
332-வரத -தேவர்களுக்கு வரங்களை அருளுபவர் –
333- வாயு வாஹன -பிராணனான காற்றையும் நடத்துபவர் –
————————————————————————————–
வாசூதேவனின் குணங்கள் –
334- வாஸூ தேவ -அனைத்துள்ளும் வசிப்பவர் -சூர்யன் தன் ஒளியால் உலகமூடுவது போலே உலகையே அணைத்தவர்
335-ப்ருஹத்பாநு -பல்லாயிரம் சூர்யர்களின் ஓளியை உடையவர் –
336-ஆதிதேவ -உலகிற்கு முதல் காரணமாய் இருந்து படைப்பை விளையாட்டாகக் கொண்டவன் –
337-புரந்தர -அசூரர்களின் பட்டணங்களை அழிப்பவர்
338-அசோகா -பசி மயக்கம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் –
339-தாரண -திருடர் பகைவர் முதலான பயன்களைத் தாண்டுபவர் –
340-தார -பிறப்பு இறப்பு கர்ப்ப வாசம் முதலிய அச்சங்களைத் தாண்டுவிப்பவர் –
341-சூர -மேற்கண்டவைகளில் எப்போதும் வெற்றி திறல் உடையவர் –
342-சௌரி-சூரன் என்னும் வசூதேவரின் மகன் –
343-ஜ நேஸ்வர-பிறப்புடைய மக்களுக்கு எல்லாம் தலைவர் –
344-அனுகூல -தன் மேன்மை பாராமல் அடியார்களால் எளிதில் அடையப் படுபவர் –
345-சதாவர்த -அடங்காமல் வளர்ந்து வரும் செல்வச் சூழல்களை உடையவர் –
——————————————————————————————-
வாசூதேவனின் திருமேனி –
346-பத்மீ-கையிலே விளையாட்டுத் தாமரையை பிடித்து இருப்பவர் –
347-பத்ம நிபேஷண-தாமரை போல் மலர்ந்த கண்களால் அருளுபவர் –
348-பத்ம நாப – தன் உந்தியில் மலர்ந்த தாமரையை உடையவர்
349-அரவிந்தாஷ–கமலம் போன்ற கண்கள் உடையவர் –
350-பத்ம கர்ப -அடியார்களின் தாமரை போன்ற இயைய ஆசனத்திலே வீற்று இருப்பவர் –
351-சரீரப்ருத் -தமக்கு உடல் போன்ற பக்தர்களைப் பேணுபவர் –
—————————————————————-
வாசூதேவனின் செல்வம் –
352-மஹர்த்தி -பக்தர்களைப் பேணுவதற்காகப் பெரும் செல்வம் உடையவர் –
353-ருத்த -பக்தர்கள் வளர்வதைக் கண்டு தான் செழிப்பவர்-விபீஷணனுக்கு முடி சூடி தான் ஜூரம் தவிர்ந்து மகிழ்ந்தார் பெருமாள் –
354-வ்ருத்தாத்மா -மேற்கண்ட பெருமைகளை உள்ளங்கையிலே அடக்கம் அளவிற்கு ஸ்வரூப மேன்மை பெற்றவர் –
355-மஹாஷ-வேத வடிவரான கருடனை வாகனமாகக் கொண்டவர் –
356-கருடத்வஜ -பரம் பொருளுக்கு அடையாளமாய் கருடனையே கொடியாகக் கொண்டவர் –
357-அதுல -நிகர் அற்றவர் ஒப்பிலியப்பன் –
358-சரப -வேத வரம்புகளை மீறினவர்களை அழிப்பவர் –
359-பீம-ஆணையை மீறுபவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவர் -தேவர்களும் பெருமானின் ஆணைக்கு உட்பட்டே கடைமையை ஆற்றுபவர் –
360-சமயஜ்ஞ- பக்தர்களைக் காப்பதற்கு வேண்டிய தக்க தருணத்தை உடையவர் –
361-ஹவிர்ஹாரி -யாகங்களில் கொடுக்கப் படும் ஹவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்பவர் -பக்தர்களுக்குத் தன்னையே கொடுப்பவர் -அடியார்களின் பாபத்தை போக்குபவர்
—————————————–
வாசூதேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –
362-சர்வ லஷண லஷண்ய-திருமகள் நாதனான படியால் மஹா புருஷணன் லஷணம் பொருந்தியவன் –
363-லஷ்மீ வான் -விட்டுப் பிரியாத திருமகளை உடையவன் –
364-சமிதிஜ்ஞய -அடியார்களின் குழப்பத்தை வென்று தெளிவு கொடுப்பவர் –
365-விஷர-தன்னை அடைந்தவர்கள் இடம் குறையாத அன்புடையவர் –
366-ரோஹித -தான் கறுத்தவர் –ஆனால் தாமரையின் உட்புறம் போன்ற சிவந்த கண் கை கால் உடையவர் –
மேகத்தைப் போல் பகவான் -அதில் மின்னலைப் போல் மஹா லஷ்மீ –
367-மார்க-பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர் –
368-ஹேது -பக்தர்களின் வேண்டுகோள்கள் பயன் பெறக் காரணமாய் இருப்பவர் –
369-தாமோதர -தாமம் என்று பெயர் பெற்ற உலகங்களை வயற்றில் கொண்டவர் -யசோதையின் தாம்பினால் கட்டுண்டவர் –
370-சஹ -திருமகள் கேள்வனாக இருந்தாலும் அவதாரத்தில் கட்டுண்டு எளிமையைக் காட்டுபவர் –
371-மஹீதர -பூமியின் சுமையைத் தாங்குபவர் –
372-மஹாபாக -கோபிகள் மற்றும் ருக்மணீ சத்யபாமா ஆகியோரால் விரும்பப்படும் பெருமையை உடையவர் –
373-வேகவான் -மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் பரம் பொருளான வேகம் குறையாதவர் –
374-அமிதாசன -ஆயர்கள் இந்தரனுக்கு படைத்த அட்டுக்குவி சோற்றை விழுங்கியவர் –
375-உத்பவ -தாம் கட்டுண்டதை நினைப்பவரின் சம்சாரக் கட்டை விலக்குபவர் –
376-ஷோபண-சம்சாரத்தில் கட்டும் பிரக்ருதியையும் கட்டுப்படும் ஜீவர்களையும் சிருஷ்டியின் போது கலக்கி உண்டாக்குபவர் –
377-தேவ -ஜீவர்களை விளையாடச் செய்து தானும் விளையாடுபவர் –
378- ஸ்ரீ கர்ப-நீக்கமில்லாத திருமகளோடு இன்புறுமவர்-
379-பரமேஸ்வர -நீக்கமில்லாத் திருமகள் தொடர்போடு அனைத்தையும் ஆட்சி செய்பவர் –
380-கரணம் -காணுதல் கேட்டல் முதலான செயல்களுக்கு கருவியாக இருப்பவர்
381- காரணம் -புலன்கள் செயல்படுவதற்குக் காரணம் ஆனவர் –
—————————————————-
கருவியும் காரணமும் இயக்குமவனும் செய்பவனும் அவனே
382-கர்த்தா -ஜீவர்களின் இன்ப துன்பங்களைத் தன்னதாக கொண்டு
383-விகாரத்தா -அடியார்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டாலும் தான் இன்ப துன்பங்களால் மாறுபடாதவர்-பிறருக்காக துக்கப்படுதல் குற்றம் அல்லவே
384- -கஹன-ஜீவர்களின் இன்ப துன்பங்களை தன்னதாக நினைப்பதில் ஆழம் காண முடியாதவர் –
385-குஹ -மேல் சொன்ன வகைகளில் அடியார்களைக் காப்பவர்
——————————————————————————————–
த்ருவனும் நஷத்ர மண்டலமும் –
386-வ்யவசாய-அனைத்து க்ரஹங்களும் நஷத்ரங்களும் உறுதியாக தன்னிடம் பிணைக்கப் பட்டு இருக்கிறவர் –
387-வ்யவஸ்தான-காலத்தின் பிரிவுகளான -கலை நாழிகை முஹூர்த்தம் -ஆகியவற்றுக்கு அடிப்படையானவர் –
388-சமஸ்தான -அனைத்தும் இறுதியில் தம்மிடம் முடியும்படி இருப்பவர் –
389-ஸ்தா நத-த்ருவனுக்கு அழியாத உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தவர் –
390-த்ருவ -அழியாதவர் -த்ருவனுக்குப் பதவி கொடுத்து அழியாப் புகழ் கொடுத்தவர் –
391-பரர்த்தி -கல்யாண குணங்களால் நிரம்பியவர் –இராமனின் நிறைவுக்கு நிகர் இல்லை –ஆனால் போலி கூறலாம்
—————————————————————————————————-
மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் இராமன் –
392-பரம ஸ்பஷ்ட -தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –
393-துஷ்ட -தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் –
394-புஷ்ட -நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –
395-சூபேஷண- மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் –எவன் இராமனைப் பார்க்க வில்லையோ -எவனை இராமன் பார்க்க வில்லையோ அவர் இருவருமே இகழத் தக்கோர் –
396-ராம -தன் குணங்களாலும் திருமேனி அழகாலும் அனைவரையும் மகிழ்விப்பவர் –
397-விராம -தான் செயல் படும் போது வரம் கொடுத்த தேவர்கள் -வரம் பெற்ற இராவணன் -கொடுக்கப் பட்ட சாகா வரம் ஆகிய அனைத்தும் ஓயுந்து போகும்படி செய்தவர்
398-விரத -அரசில் பற்று இல்லாதவன்
மார்க -பரத்வாஜர் முதலான முனிவர்களால் தேடப்படுபவன்
விராதோமார்க–ஒரே நாமமான போது -குற்றம் இல்லாத வழியைக் காட்டுபவர்
399- நேய -அன்பு கொண்ட ரிஷிகள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர்
400- நய -ரிஷிகளைக் கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் –
401-அ நய -பகைவர்களால் நடத்தப்பட முடியாதவர் –
402-வீர -ராஷசர்களை அச்சத்தில் நடுங்க வைப்பவர் –
403-சக்திமதாம் ஸ்ரேஷ்ட –வலிமை மிக்க தேவர்களை விட சிறந்தவர் –
404-தர்ம -தர்மத்தின் உருவானவர் -இவ்வுலக அவ்வுலக பேற்றைக் கொடுத்து ஜீவர்களை தாமே தாங்குபவர் –
405-தர்ம விதுத்தம -தர்மம் அறிந்தவர்கலான ரிஷிகளை விடச் சிறந்தவர் –
406-வைகுண்ட -பக்தர்களை விலகாமல் தம்மிடம் சேர்த்துக் கொண்டவர் –
407-புருஷ -பாவச் சுமையை எரிப்பவர் -சராசரங்களுக்கு முன் செல்பவர் –
408-பிராண அனைவரையும் உய்விக்கும் மூச்சுக் காற்றானவர் –
409-ப்ரணத-உயிர் அளிப்பவர்-இராமன் வனம் சென்ற
போது மரங்களும் வாடிப் போயின –
410-பிரணவ -அனைவரும் தம்மை வணங்கும் படி இருப்பவர் –
411-ப்ருது-பெரும் புகழாளர் –
412-ஹிரண்ய கர்ப -அவதாரங்களின் பிற்பட்டவர்களின் உள்ளங்களிலும் பொன் போலே வசிப்பவர் –
413-சத்ருகன -தன்னை த்யாநிப்பவர்களின் தறி கெட்டோடும் புலன்களை பகுத்தறிவை அருளி அடக்குபவர் –
414-வ்யாப்த -பக்தர்கள் இடம் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் விரயமான அன்பு காட்டுபவர் –
415-வாயு -சபரி குஹன் பரத்வாஜர் போன்ற அன்பர்களின் இருப்பிடத்துக்கு தேடிச் செல்லும் காற்று போன்றவர் –
416-அதோஜஷ – யாவரும் அனுபவித்து பயன்படுத்தினாலும் கடல் போன்று பெருமை குறையாதவர் –
417-ருது -பக்தர்களை வளர்க்கும் கிளர்ந்து வரும் குண வரிசைகளை உடையவர் –
418-சூதர்சன-இராமனின் பெருமை அறியாதவரும் அவன் திரு மேனியைக் கண்டவுடன் ஈடுபடும் அழகு உடையவர்
419-கால -தன் நற்பண்புகளால் அனைவரையும் தம்மிடம் இழுத்துக் கொள்பவர் –
420-பரமேஷ்டீ-இராமாவதாரம் முடிந்த பின்பு திரும்பவும் வைகுந்தத்தில் இருப்பவர் –
421-பரிக்ரஹ -இராமன் இவ்வுலகை விட்டு வைகுந்தம் சொல்லும் போது அயோத்தி மக்களையும் மரங்களையும் எங்கும் ஏற்றுக் கொண்டவர் –
———————————————————————————
கல்கி அவதாரம் –
422-உக்ர -தர்மத்தின் பகைவர்கள் இடத்தில் கொடியவரை இருப்பவர் –
423-சம்வத்சர -அழிப்பதற்கு உரிய கருவிகள் உடன் பாதாள உலகில் ஆதி சேஷன் மேல் காத்து இருப்பவர் –
424-தஷ -கலி யுக இறுதியில் திரிந்து கொண்டு இருக்கும் தீயவர்களை விரைவிலே அழிப்பவர்-
425- விஸ்ராம -தீய வினைகளின் பயனாக களைத்தவர்களுக்கு இளைப்பாறும் இடம் –
426-விஸ்வ தஷிண -நல்லார் தீயார் என்ற வேற்றுமை இன்றி அன்பைக் காட்டுபவர் –
427-விஸ்தார -அதர்மமான கலியுகத்தை அழித்து க்ருத யுக தர்மத்தை வெளிப்படுத்துமவர்-
428-ஸ்தாவரஸ் தாணு -கல்கியாய் தர்மத்தை நிலை நிறுத்தி பின் சாந்தமாக இருப்பவர் –
429-பிரமாணம் -தர்மத்தை க்ருத யுகத்தில் உள்ளோர் கடைப்பிடிக்க அறிவின் ஊற்றமாக இருப்பவர் –
430-பீஜமவ்யயம் -க்ருத யுகம் வளர்வதற்கு அழிவில்லாத விதை போன்றவர் –
431-அர்த-அவன் இடத்திலேயே லயித்த பக்தர்களால் பயனாக வேண்டப்படுபவர் –
432-அ நர்த -தாழ்ந்த பயன்களை விரும்புவர்களால் வேண்டப்படாதவர் –
433-மஹா கோச -பக்தர்களுக்குக் கொடுக்க குறைவற்ற நவ நிதிகளை -சங்க பத்ம -மஹா பத்ம மகர கச்சாப -முகுந்த குந்த நீல கர்வ -உடையவர் –
434-மஹா போக -செல்வத்தால் சாதிக்கப்படும் சிறந்த இன்பத்தைத் தருபவர் –
435-மஹா தன -வாரி இறைத்தாலும் அழியாத செல்வம் உடையவர் –
—————————————————————–
நஷத்ரங்களும் சிம்சூமார சக்கரமும் –
436-அநிர்விண்ண-மக்கள் தாழ்ந்த செல்வத்தையே தன்னிடம் வேண்டினாலும் அவர்களை திருத்துவதில் சோர்வில்லாதவர்-
437-ஸ்தவிஷ்ட -நஷத்ர மண்டலம் ஆகிய சிம்சூமார சக்கரமாக விரிந்து இருப்பவர்
438-பூ -த்ருவ பதவியில் இருந்து பூமியையும் ஆகாயத்தையும் தாங்குபவர் –
439-தர்மயூப -தர்மத்தைத் தலை போலே முக்கியமாகத் தன்னிடம் சேர்த்துக் கொண்டவர் –
440-மஹா மக -தர்மத்தை வளர்க்கும் யாகங்களை தனக்கு உடல் உறுப்பாகக் கொண்டவர் –
441-நஷத்ர நேமி -நஷத்ரங்களைச் சுற்றி வரச் செய்பவர் –
442-நஷத்ரீ-நஷத்ரங்களுக்கு உள்ளே இருக்கும் ஆதாரம் ஆனவர் –
443-ஷம-பிரபஞ்சகச் சுமையை எளிதில் தூங்குபவர் –
444-ஷாம -பிரமனின் இரவுப் பொழுது பிரளயத்தின் போது ஏனைய நஷத்ரங்கள் அழிந்து த்ருவனோடு நான்கு நஷத்ரங்களே இருக்கிறபடியால் குறைவு பட்டு இருப்பவர் –
445-சமீ ஹன-சிருஷ்டி தொடங்கியவுடன் மக்களை தம் தம் தர்மத்தில் ஈடுபடுத்துபவர் –
————————————————————
யஜ்ஞ ஸ்வரூபி –
446-யஜ்ஞ- யாக யஜ்ஞ வடிவமானவர் –
447-இஜ்ய -உலகச் செல்வத்தை வேண்டுபவர்களால் இந்த்ரன் முதலான தேவர்கள் உருவில் பூசிக்கப் படுபவர் –
448-மஹேஜ்ய-அவனையே விரும்புவர்களால் நேரே பூசிக்கப் படுபவர் –
449-க்ரது-பஞ்ச மஹா யஜ்ஞம் முதலியவற்றால் பூசிக்கப் படுபவர் –
450-சத்தரம் -பலரால் நீண்ட காலம் செய்யப்படும் சத்திர யாகத்தில் பூசிக்கப் படுபவர்
———————————-
நர நாராயண அவதாரம் –
451- சதாம் கதி -புலன்களை அடக்கிய பற்று அற்றவர்களுக்கு சேரும் இடமாய் இருப்பவர் –
452-சர்வ தர்சீ-பற்றுடன் செய்யும் தர்மம் -பற்று அற்று நீங்கும் தர்மம் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்கள் -ஆகிய இரண்டையும் நேரே காண்பவர் –
453-நிவ்ருதாத்மா -வைராக்யத்தை உபதேசிப்பதற்க்காக நாராயண அவதாரம் எடுத்து பற்று அற்று இருந்தவர் –
454-சர்வஜ்ஞ -குறைவற்ற தன் மேன்மையை முற்றும் அறிந்தவர் –
455-ஜ்ஞானமுத்தமம் -பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அனைவரும் அறியக் காரணம் ஆனவர்
456-சூவ்ரத -கர்மம் தீண்டப் பெறாதவராய் இருந்தும் பிறருக்கு முன் மாதிரியாய் ஆவதற்காக தர்மங்களைச் செய்ய உறுதி கொண்டவர் –
————————————————————–
அலைகடல் கடைந்த ஆரமுதம் –
457-சூமுக-அமுதம் கொடுக்கும் போது களைப்பில்லாத இன்முகம் கொண்டவர் –
458-சூஷ்ம -ஆழ்ந்த த்யானத்தினால் மட்டும் அறியப்படும் நுண்ணிய தன்மை கொண்டவர்
–அமுதம் கொடுத்த போது அவர் நினைவை அசூரர்களால் அறிய முடிய வில்லையே —
459-சூகோஷ -உபநிஷத்துக்களின் சிறந்த ஒலியால் போற்றப் படுபவர் –தேவர்களாலும் அசூரர்களாலும் போற்றப்படுபவர் –
460-சூக்த -த்யான மார்க்கத்தவர்களுக்கு நிலை நின்ற இன்பத்தை தருபவர் –
461-சூஹ்ருத் -தன்னை சிந்தியாதவர்களையும் என் செய்து திருத்துவோம் -என்ற நல் எண்ணம் உடையவர் –
462- மநோ ஹர -மோகினியாய் அசூரர்களையும் மயக்கும் பேர் அழகு உடையவர் –
463-ஜிதக்ரோத -அடியவர்களின் ஆசையையும் கோபத்தையும் போக்குகிறார் -மோகினியிடம் மயங்கி அசூரர்கள் கோபத்தை மறந்தனர் –
464-வீர பாஹூ -கடல் கடைந்த போது ஆபரணங்கள் பூண்ட ஆயிரம் கைகள் கொண்டவர் –
465-விதாரண -தன் ஆயுதத்தினால் ராஹூ முதலானோரை வெட்டியவர்
466-ஸ்வா பன-அழியாமல் மீதம் இருந்தவர்களை புன்சிரிப்பாலும் இனிய நோக்காலும் தூங்க வைத்தவர் –
467-ஸ்வ வஸ-அசூரர்களைத் தூங்க வைத்த உடன் -தன் வசத்தில் இருக்கும் தேவர்களோடு மகிழ்பவர் –
468-வ்யாபீ-கடல் கடைய சக்தியை வளர்ப்பதற்காக மந்த்ரம் வாசூகி ஆகிய அனைத்திலும் வ்யாபித்தவர்
469-நைகாத்மா -கடல் கடையும் விஷ்ணுவாக -ஆமையாக -மோஹினியாக பல உருவங்களை எடுத்தவர் –
470-நைக கர்மக்ருத் -கடல் கடைவது , மலையைத் தாங்குவது -அமுதம் அளிப்பது -முதலிய பல செயல்களைக் கொண்டவர் –
——————————————————————————
தர்மத்தின் வடிவம் –
471- வத்சர -இறுதிப் பயனை நிலை பெறச் செய்ய அனைவருக்கு உள்ளும் உறைபவர் –
472-வத்சல-தாய்பசு கன்றை நேசிப்பது போல் சரணா கதர்களின் இடம் பேரன்பு கொண்டவர் –
473-வத்சீ -தம்மால் பேணப்பட்ட ஜீவர்களை மிகுதியாக உடையவர் –
474-ரத்ன கர்ப -வேண்டுபவர்களுக்கு கொடுக்க ரத்னங்கள் ஆகிற சிறந்த செல்வத்தை உடையவர்
475-தானேச்வர -அவரவர் விரும்பிய செல்வதை உடனே அளிப்பவர்-
476-தர்மகுப் -தான் அளித்த பொருள் தீய வழியில் பயன்படாமல் தர்மத்தைக் காப்பவர் –
477-தர்மக்ருத் -தர்மத்தை செய்பவர்களுக்கே அருள் புரிபவர் -ஆதலால் அனைவரையும் தர்மத்தைச் செய்ய வைப்பவர் –
478-தார்மீ -அனைத்து செயல்களுக்கும் தர்மத்தைக் கருவியாகக் கொண்டவர் –
479-சத் -அழியாத் தன்மையும் மங்கள மான குணங்களும் எப்போதும் பொருந்தி இருப்பவர் –
480-சதஷரம் -எப்போதும் எங்கும் தன் பண்புகளிலும் இயக்கத் தன்மையிலும் குறைவு படாதவர் –
481-அசத் -தீயவர்களுக்கு சம்சாரத் துன்பத்தைக் கொடுப்பதால் துன்ப வடிவானவர் –
482-அசத் -ஷரம்-அசூரர்களை எப்போதும் துன்பத்திலே வைத்து இருப்பவர் –
483-அவிஜ்ஞ்ஞாத –மெய்யன்பர்களின் குற்றங்களைக் காணாதவர் -அறியாதவர் –
484-சஹச்ராம்சூ –அளவற்ற அறிவை உடையவர் –
485-விதாதா -தன் அடியார்களை யமனும் கூட தண்டிக்காத படி நடத்துபவர் –
486-க்ருத லஷண -முக்தி யடையத் தக்கவர்களுக்கு தாமே சங்கு சக்கரப் பொறி அடையாளம் இட்டு இருப்பவர் –
487-கபஸ்தி நேமி -ஒளி உடைய ஆயிரம் முனைகளை உடைய சக்கரத்தை உடையவர் –
488- சத்வச்த -பக்தர்களின் இதயத்தில் இருந்து கொண்டு யமனிடத்தில் இருந்து காப்பவர் –
489-சிம்ஹ -இப்படி இருக்கும் பக்தர்களைத் துன்புறுத்தும் யமனையும் தண்டிப்பவர் –
490-பூத மகேஸ்வர -யமன் பிரமன் முதலானோர்க்கும் தலைவர் –
491-ஆதி தேவ -தேவர்களுக்கும் முந்தியவர் -பிரகாசிப்பவர் –
492-மஹா தேவ -தேவர்களை விளையாட்டுக் கருவிகளாக வைத்து லீலை புரிபவர் –
493-தேவேச –தேவர்களை அடக்கியாளும் சக்ரவர்த்தி
494-தேவப்ருத்-தேவர்களைத் தாங்கிக் காப்பாற்றுபவன் –
495-குரு -வேதத்தின் படி தேவர்களின் கடைமையை உபதேசிப்பவர் –
496-உத்தர -ஆபத்துக் கடலில் இருந்து தேவர்களைக் கரை ஏற்றுபவர் –
497-கோபதி -வேதங்கள் மொழிகள் ஆகிற பேச்சுக்குத் தலைவர் –
498-கோப்தா -அனைத்து வித்யைகளையும் காப்பவர் –
499–ஜ்ஞான கம்ய -சமாதி என்னும் த்யான நிலையால் -பர வித்யையால்-அறியப் படுபவர் –
500-புராதன -இப்படியே முன் கல்பங்களிலும் விதைகளை வெளியிட்டவர் –
501-சரீரபூதப்ருத்-தனக்கு உடலாக இருக்கும் பஞ்ச பூதங்களை தாங்குபவர் –
502- போக்தா -தேவர்களுக்குக் கொடுக்கப் படும் ஹவ்யத்தையும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் கவ்யத்தையும் ஹயக்ரீவராக குதிரை முகத்தோடு உண்பவர்
—————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்