திருப்பிக்கொடு
![](https://eluthu.com/images/loading.gif)
எதைவேண்டுமானாலும்
வைத்துக்கொள்
காதலை மட்டும் மாறாமல்
திருப்பித்தந்துவிடு!..
கடக்கும் இடங்களும் பாதசாரி மனிதன் பார்வைகளும் என்னை மேலும் தனிமையுற்றவனாய் காட்டுகிறது எந்தன் பருந்துப்பார்வைக்கு
எத்தனித்த வார்த்தைகளின் தூரம் வைக்கப்பட்ட எந்தன் கைகளுக்கு எல்லாம்
இழந்த கைகளில் எதையாவது இட்டுவைப்பாய் என்றபடி ஏந்திக்கொள்கிறது
சத்தியம் செய்வேன் என்னை மறக்கவில்லையென்று
யார்வார்த்தையோ உன் மௌனங்களையும் நம் காதல் வாழ் நிமிடங்களையும் ஒத்திகையாய் புன்முறுவல் செய்வதாய் மனப்பீதி
சந்தேக தேடல்களில் தவிடுபொடியாய் போனவன் நான் அதில் சில நிஜங்களை கண்டபின் மாற்றம் காணாதாதிருந்தேன்
கிணற்று தவளையாய் கால சர்ப்பனின் காதுகளுக்கு ஒலி தந்துகொண்டிருக்குகிறேன் அவனும் தேடியபடி...
என்றேனும் மடிவேன் என்பது நிச்சயம் உன்னில் மறுபிறப்பாய் வாழ்ந்திட ஆசை
இருப்பிடம் உன்னது என்றால் மிக்க மகிழ்ச்சி.
உனக்காய் தொலதூரம் கடந்தவன்
இன்னும் என்னை நச்சிரிப்பாய் செய்த அழைப்பு ஏற்காதபடி இருக்கச்சொல்கிறாய் மீண்டும் தொடற்கிறாய் !...
என்றெல்லாம் சொன்ன சண்டைகளின் வார்தைகள் உனக்கேன் வலிக்கிறது ஏதோ முரண்பாடு.
இப்பொழுதும் உன்னில் விழுந்த மூச்சுக்காற்றும் உனக்கானதாய் உன்னருகில்
சுவாசித்துப்பார் வேறு ஒருவர் நாற்றம் வந்தால் விலக்கிடு இன்றே!..
மரணம் கூட உந்தன் பின்பக்க கதவுவழி திறந்தபடி!.......