மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
இசை வானில் சிறகொடிந்த மனிதனே!!!!
உன்னால் தான் மெல்லிசையும் இனிமையே!!!
ஏழு ஸ்வரங்களும் உன் விரலுக்குள் அடக்கம்.
மரணம் என்ற குறுஞ்சொல்லால் வாழ்வு முடக்கம்.
தமிழெனும் தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்ததுவே!!!
கால் வலி கட்டிலில் கண்ணீரால் கண்ணினை திறக்க...!!!
கவிஞனின் ஜடமான வரிகளுக்கு சுவாசத்தால் உயிர் கொடுத்தாய்.
இசைக்கு ஏற்பட்ட தாகம் உன் உயிர் மேல் மோகமே...?????????
சிரித்த இதழ்களை மெளனமாகக் கண்டேன்.
இசை மூங்கில் காடுகளை தீப்பற்றச் சொன்னேன்
கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும்
எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம்
ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம்.
இசை அணு உன் உயிரில் ஒட்டி
ஆர்மீனியத்தை விரல்கள் தட்டி
இன்பமாய் நீ செய்த தவங்கள்
விரல்கள் கட்ட காலத்தின் சாபமா??
கலைஞன் வாழ்க்கை மரணத்தால் ஒடியாது
ஆயிரம் வருடம் கடந்தாலும் இசை பயணம் முடியாது
உன்னை கவி பாட என் மனம் அழுகிறது
சிந்தை துன்ப ஊஞ்சலில் ஒப்பாரியாய் அசைகிறது
குறிப்பு:எம்மை விட்டு பிரிந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம்