மெல்லிசை மன்னரென்று மீட்டு

கல்லுங் கனிய கவிபாடும் கண்ணதாசன்
சொல்லுங் கவியாகும் சொல்லுங்(கள்)- வல்லவரின்
சொல்லை இசைத்தமிழாய் சொக்கட்டா(ன்) ஆடவைத்தார்
மெல்லிசை மன்னரென்று மீட்டு.

கல்லுங் கனிய கவிபாடும் கண்ணதாசன்
சொல்லுங் கவியாகும் சொல்லுங்(கள்)- வல்லவரின்
சொல்லும் அணிச்சதங்கை பூட்டிவரச் செய்தவர் நம்
மெல்லிசை மன்னரென்று மீட்டு.

கல்லுங் கனிய கவிபாடும் கண்ணதாசன்
சொல்லுங் கவியாகும் சொல்லுங்(கள்)- வல்லவரின்
சொல்லு மணிச்சதங்கை பூட்டிவரச் செய்தவர் நம்
மெல்லிசை மன்னரென்று மீட்டு.

கல்லுங் கனிய கவிபாடும் கண்ணதாசன்
சொல்லுங் கவியாகும் சொல்லுங்(கள்)- வல்லவரின்
சொல்லும் அனிச்சதங்கை சூடிவரச் செய்தவர் நம்
மெல்லிசை மன்னரென்று மீட்டு.

சொல்லு மணிச்சதங்கை என்றும் சொல்லும் அணிச்சதங்கை என்றும் பார்க்கலாம்

சொல்லும் அணிச்சதங்கை-அனிச்ச தங்கை அனிச்சத்தை விடவும் மெல்லியதாக சொல்லை இசையாக்கித்தந்த மெல்லிசை மன்னரென்று மீட்டு.

எழுதியவர் : சு.ஐயப்பன் (14-Jul-15, 9:53 am)
பார்வை : 46

மேலே