தென்னங் கீற்று
தென்னங் கீற்றினில்
கீதம் பாடும் தென்றல்
தென்னையில் சாய்ந்திருந்த
உன் கூந்தலில் வந்து கவிதை எழுதுது
தென்னங் கீற்றுடன் தென்னையாட
சாய்ந்திருந்த நீயும் சேர்ந்தாட
என் மனமும் ஆடுதே
தென்னங் கீற்றினைப் போல்
கீதம் பாடுதே கொஞ்சும் தமிழிலே !
~~~கல்பனா பாரதி~~~