வல்லரசு

அன்புள்ள இந்தியாவிற்கு!
சுதந்திரம் எழுதுவது!.

என்னை முழுமை கண்டதாய்
மயக்கம் கொண்டாயோ!.
அன்று !
தூய உள்ளம் கொண்ட
உத்தம தியாகிகளின்-உயிர்
போராட்டத்திலும்
சுதந்திர போராட்டத்திலும்
உன்னை அடைந்தேன்!..

இன்று!
ஊழல் எனும் உடும்பாய் மாறி!
சந்தனம் பூசும் சாக்கடை பிரியர்களிடம் தஞ்சமானேன்!..


கொலையும் கொள்ளையும்
என் மற்ற சகாக்கள்!..

வெள்ளைக்காரன் என்பதால் பலகலகம் கண்டு
வெளியேற்றினாய்!..

நான் இங்கையே பிறந்து வளர்ந்து உன்னை விழுங்கும் அளவு கொடிய மிருகம்!.
நான் வேறு நாடு வேறல்ல!..

இளையோர் தலையெடுத்தால் இன்னும் சில ஆண்டில்
வல்லரசவாயாமே!..

போராடும் இளைய சமுதாயம் ரத்தம் உறிஞ்சிம் அட்டை பூச்சிகளிடம் மாட்டித்தவிக்கிறது!.

மாண்ட மாவீரர்கள் மீண்டால் உனக்கொரு வாய்ப்புண்டு!..

எப்பொழுது தொடங்கப்போகிறாய்
என்னை முழுமையடையும் போராட்டத்தை!.

பதில் கூறும்முன் சுற்றம்பார்
என் உறவுகள் உன்னைசுற்றியிருக்கலாம்!..
அவர்கள் போராட லஞ்சம் கேட்கக்கூடும்!...

என்னை!
முடிந்தால் பெற்றுக்கொள்!
காத்திருக்கிறேன்
உன் கனவு வல்லரசாக!...

எழுதியவர் : மகிதமிழ் (26-Jun-15, 5:37 pm)
Tanglish : vallarasu
பார்வை : 339

மேலே