சுயம்பு

(Tamil Nool / Book Vimarsanam)

சுயம்பு

சுயம்பு விமர்சனம். Tamil Books Review
வெ.முனீஷின் சுயம்பு கவிதை நூல் விமர்சனம்.
;
-------------------

தமிழில் எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் " சுயம்பு "என்ற இவ்வார்த்தைக்கு மட்டும்தனித்துவமான ஒரு "தன் நிலை" உண்டு. அத் தன்னிலையை தன்னகத்தே கொண்டு வெளிவந்துள்ள இந்த சுயம்பு சற்று அல்ல மிகப்பெரியதொரு மாறுபட்ட படைப்பு.

"மாறுபட்ட படைப்பு என்று சொல்வது கூட இத்தொகுப்பிற்கு பொருத்தமானதே! ஏனெனில் ஆண் பெண் படைப்புகளிலிருந்து மாறுபட்ட "அரவாணியர்கள்"படைப்பைப் பற்றிப் இத்தொகுப்பு கவிதைகள் முழுவதும் பேசுவதால் "மாறுபட்ட" என்ற வார்த்தை "இரு" வகையிலும் பொருத்தமான "ஒன்றே".இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை முதல் முறை படித்த போது அது ஏதோ செய்தது. அப்படி என்ன "ஏதோ" செய்கிறது என மறுமுறை படிக்க .....ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு "சம்மட்டி "அடியாய் நெற்றிப் பொட்டில் இறங்கியது. நான் வெளிறிப் போனேன்.
உதாரணத்திற்கு ஒரே ஒரு கவிதையை சுட்டுகிறேன்.

"வாசிக்கப்படாமல்
விமர்சிக்கப்படும் புத்தகம்
அரவாணி "

இதுநாள் வரை திருநங்கையர் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல் வெறுமனே ஒரு தவறான பார்வையை அவர்கள் மீது நாம் பதிய விட்டு வந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் சாட்டையால் சொடுக்கிக் கூறுகிறார்.இன்னும் இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இருப்பினும் நூலின் ஆசிரியர்திரு. வெ.முனிஷ் அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே போற்றிப் பேசப் பட வேண்டியவர். அதற்கான நேரமும் காலமும் விரைவில் கூடி வர நூலின் ஆசிரியர் அவர்களை வாழ்த்துவோம்

கௌரே கணேசன்
பதிவிடுபவர் :கவிஞர் பெ .அசோகன்

சேர்த்தவர் : அசோகன்குறிஞ்சி
நாள் : 26-Aug-19, 9:39 pm

சுயம்பு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே