நல்லதை நினை

விதைக்க நினைத்தால்
அன்பை விதையுங்கள்
புதைக்க நினைத்தால்
விதையைப் புதையுங்கள்
கொடுக்க நினைத்தால்
அறிவைக் கொடுங்கள்
கொளுத்த நினைத்தால்
கோபத்தைக் கொளுத்துங்கள்
சேமிக்க நினைத்தால்
உறவைச் சேமியுங்கள்
செய்திட நினைத்தால்
நல்லதே செய்யுங்கள்
அழிக்க நினைத்தால்
ஆணவத்தை அழியுங்கள்
அடைய நினைத்தால்
ஆண்டவன் திருவடியை அடையுங்கள்
வாழும்போது மனிதனாகுங்கள்
சாகும்போது சாமியாகுங்கள்

எழுதியவர் : பெ.அசோகன் (10-Aug-24, 11:43 am)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
Tanglish : nallathaai ninai
பார்வை : 45

மேலே