மழையே நீயும் ஒரு பெண் தானோ

மழையே மாநிலம் தழைக்க பொழிந்தாயே
நானிலம் சிறக்க நனைத்தாயே

நீயும் பெண் தானோ ஏனெனில் வந்தால் திகட்டல்
வரவில்லை யெனில் வாட்டல்

கூட்டம் கூட்டமாக கூடுகிறீர்கள்
நாட்டம் நாட்டமாக உம்மை நோட்டம் காணவேஎம் கண் கொள்கிறீர்கள்

மழையே நீ வரவில்லை எனில் புறம் முழுக்க வெக்கைச்சூடு
அவள் தான் வரவில்லை எனில் என்
அகம் முழுக்க தாகச்சூடு

மழை பெருகிட வெள்ளம் கூடிட நிலம் எங்கும் சமன் ஆகிடும்
அவள் எமைநாடிட அன்பு கூடிட உளம்
எமக்கு சமன் ஆகிடும்

உம்மை எதிர்த்து ஆலம் ஆக நின்றவரை வேரோடு சாய்ப்பதில் இருவருமே சூறாவளி

உம்மை எதிர்த்து நாணலாக நின்ற எதையும் தென்றலாக தீண்டி செல்வதில் இருவரும் பொறுமைசாலி

அதனால் தான் மண் செழிக்க மழையும் ஆண் செழிக்க பெண்ணும் படைத்தானோ இறைவன்

எழுதியவர் : பாளை பாண்டி (11-Aug-24, 6:36 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 164

மேலே