பட்டினிப் பார்வை

அதிகாலைத் துயில் எழுந்து
அவளை தரிசிக்க காத்திருந்தேன்
என் விழிகளுக்கு விருந்தாக
வெளியே வந்தவள்
ஏங்கி கிடைக்கும் பார்வை
பசியாலே தவிக்கவிட்டு
அரிசி மாவால் கோலம் போட்டாள்
எறும்புகள் பசியாற !

எழுதியவர் : (6-Apr-17, 10:09 pm)
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே