விளங்காமலே போகட்டும்

என்னுள் தோன்றுவது எவ்வகையான உணர்வென்று
புரிந்துகொள்ள முடியாமல் நானிருக்க...
அவளுக்கோ நான் என் உணர்வுகளை
என்னவென்று விளங்க வைப்பேன்???
ஒருவேளை விளங்கிவிடும் காலத்தில்
என்னை நீங்கி எங்கோ சென்றுவிடக்கூடும்...
ஆகையால் விளங்காமலே போகட்டும்
நீங்கிச் சென்றாலும் வலிகள் குறையுமாதலால்...