நீதான் என் உள்ளத்தில் என்னவளே
என் இதயத்தில் உன்னை
பூட்டிவைத்தேன் கண்ணே
பூஜைக்குவந்த பொன்னிலவாய்
உன்னை; இன்னும் நீ இதை
நம்பவில்லை என்றால்
நான் வேறென்ன செய்யமுடியும்
இதோ என் நெஞ்சை
உன்னைப் பூஜிக்கும் நெஞ்சை
கிள்ளி வீசி எரிந்தாலும்
அது துள்ளும் போதும்
உஷா என்று உன் பெயரையே
சொல்லி அல்லவா துள்ளும்
ஆடி அடங்கும் முன்