சிவனே கதி

நித்தம் என் சித்தம் நிறைந்தவன்
பித்தன் எனும் சித்தன் ஆனவன்
அத்தன்யார்க்குமே அவன்தானே

தொற்றித் துயர் முற்றினும் பதம்
பற்றித் தோழா வெற்றித் தரும்
நெற்றிக் கண்ணுடன் நிலைத்த்தோனே

வெள்ளை மதி தொல்லை நீக்கியே
எல்லை அது இல்லை என்றிட
தில்லை நடம்புரி பெருமானே

அம்மையின் பதி அணிந்தவா மதி
சிவனே கதி அவனே விதி
தினமும் துதி விலகும் சதி என உரைத்தேனே

துக்கம் தொலைந்தக்கம் விலகிட
இக்கட்டிலும் பக்கத் துணை
நிற்க உன்னைத் தொழுதேனே

என் பக்திக்கொரு முக்திக்கொடு
திக்கெட்டிலும் மக்கட் தொழும்
சக்திக்கிடப்புறம் கொடுத்த்தோனே!!!

எழுதியவர் : (6-Apr-17, 10:31 pm)
Tanglish : sivane KATHI
பார்வை : 530

மேலே