ஆதலினால் காதல் கவிதை செய்வீர்
ஆதலினால் காதல் கவிதை செய்வீர் !!!
உன் இதயப் பக்கங்களைப்
புரட்டுகின்றேன் அதில் எங்கும்
என் முகங்களே ஓவியங்களாய் ....!
உருகுகின்ற இதயத்திலே
நீயன்றோ உயிரோவியமாய் ...!!! ( 13 )
பெருகுகின்ற மோகத்தால்
காதல்மழை பெய்திடுமோ
என் முன்னே நீ சொல்வாய் !
அருமையான நெஞ்சத்தில்
கண்மணியே ! ஆதிக்கம்
நடத்துகின்றாய் என்னுள்ளே !! ( 27 )
பெருமிதமாய் நினைக்கின்றேன்
நானுந்தான் . பேருலகில்
கொள்கின்றேன் உன்னை எண்ணி
காதலுமே என் மனத்தில்
வந்திடவும் காதலுடன்
மடலொன்றை எழுதுகின்றேன் !!! ( 41 )
மோதலுமே விடுத்திடுவோம்
நமக்குள்ளே ! மோகமுள்ளே !
நீ வாராய் என்னருகில் .
நோதலின்றி வாழ்ந்திடலாம்
எந்நாளும் . நோயான பசலைக்கும்
மருந்தாவாய் ! சாதலுக்கும்
மாற்றாக என் காதல் சத்தான
ஆணி வேராம் அறிவாயோ !!! ( 62 )
பழுதுபடாக் காத்திட்ட
இதயத்தை பக்குவமாய்
பாதுகாப்பேன் உயிராக !
தழுவிடுவேன் இதயத்தின்
பக்கங்களை உன்னை நினைத்து .
தந்திடுவாய் மறுமொழியும்
ஓவியமாய் காதலுடன் ... !!! ( 77 )
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்