இடியாய் விழு

சேருங்கள் சிங்கங்களே
செந்தமிழ்ச் சொந்தங்களே
பாரததேசத்திலே-தமிழன்
வாழ்ந்திட வக்கில்லையா
பாராண்ட நம்குலத்தோர்-சென்று
சேர்ந்திட திக்கில்லையா
தட்டிடத் தட்டிடத்திறக்கும்-எனும்
தத்துவம் தேவையில்லை
முட்டிடமுட்டிட முளைக்கும்-புதுப்
புரட்சி வேண்டுமிங்கே....
எலும்புத்துண்டுக்கு வாலாட்டும்இந்த
எச்சில் நாய்களை நம்பிநம்பி
தழும்புகண்டாய் நெஞ்சினிலே -இனி
தாமதம் கொள்ளாதே தம்பிதம்பி
பிணமாக நேர்ந்திடினும்
இனம்வாழப் போராடி உன்
நெஞ்சினில் ஏந்தினாய் தோட்டாக்களை
புறமுதுகு காட்டாதபுனானூற்றுவீரனே
சரித்திரங்கள் சாகாது நீயேசாட்சி
ஓட்டுபோட்ட மக்களுக்கு நெஞ்சில்
வேட்டுப்போட்டுக் காட்டிவிட்டான் விசுவாசத்தை.....
இனியும் ஏன் உறக்கம் நீ
எழுந்தால் வழி பிறக்கும்
புறனானூற்றைக் காட்டடா
போர்வாளினைத் தீட்டடா
கொடி பிடித்து போதும் இனி
இடிமுழக்கமாய் எழடா .....
அடிவாங்கியப் புலியாய்
அவதாரந்தனை எடடா....
வீறுகொண்டெழுந்து கொட்டுமுரசை கொடியோர்
வீழ்த்திடவந்தால் வெட்டு சிரசை

எழுதியவர் : பெ.அசோகன் (23-May-18, 6:25 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 54

மேலே