என்னைப்பற்றி

விழுந்த குழந்தை அழுவதில்லை
யாரும் பார்க்காத நேரத்தில்
நான் என் மனதை
ஒளியாக்கிக்கொண்டதனால்
மாற்றான் மனதுக்கு
வெள்ளையடிக்க விரும்பாதவன்
பழி சொற்களை உண்டே
பசியாறியவன்rன்
இழிவுபடுத்தியோரை
தெளிவு படுத்த நேரமில்லை
ஏளனம் செய்தோருக்கு
காரணம் தேடவில்லை
செவிகளிரண்டையும் செவிடாக்கி
சிகரம்நோக்கினேன்
இடறி விழுந்தபோதும்
எனது கையே ஊன்றுகோல்
ஏளனச்சொற்களை
என்னை வாழ்த்தும்
தோரண சொற்களாக்கினேன்
பழி சொற்களை
எனைப்பார்க்கும்
விளிச்சொற்களாக்கினேன்
எறும்பொப்ப முயற்சி
இரும்பொப்ப உறுதி
நாயொப்ப நன்றி
தாயொப்ப பாசம்
தீயொப்ப கோபம்
சேயொப்ப உள்ளம்
இதுவே என் தோற்றம்
இதுவே என் ஏற்றம் ...

எழுதியவர் : (1-Jul-18, 3:58 pm)
Tanglish : ennaipatri
பார்வை : 64

மேலே