தென்றலே
தென்றலே!
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும்
ஆசையாகத் தான்
இருக்கிறது,
அவள் என்னை
அவளின்
சுவாசம் வழியே
அழைத்து சென்று
இதயத்தின் உள்ளே
அடைத்து
மீண்டும் நான்
வெளியே வர வழியின்றி
இரும்புக் கம்பி
சிறையிட்டு என்னை
அவளினுள்
சிறை வைத்துக் கொள்ள
மாட்டாளோ என்று....!!