நினைக்காத நேரம்
தராசு ஒன்றில்
என் வாழ்க்கை
நேரங்களை
இரண்டாக பிரித்து
வைத்தேன்
சட்டென்று ஒரு
தட்டு மேலே போனது
ஒரு தட்டு கீழே வந்தது
தராசின் அளவை
கணித்த பின்பு தான்
கண்டு பிடித்தேன்
நான் என்னை நினைத்த
நேரங்களை விட
உன்னை நினைத்த
நேரங்கள் தான் அதிகம் என்று...!!