என்னில் உன்னை சுமக்க சம்மதம் தருவாயா 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே...
நிலவு மறைந்தது
மெல்ல கதிரவன் உதித்தது...
உன் வாசல் தேடிவந்தேன்...
என்னில் உன்னை சுமக்க
சம்மதம் கேட்டேன்...
சாட்சிகள் யார்
என்கிறாய்...
உதித்துக்கொண்டு
இருக்கும் கதிரவன்...
உன் தோட்ட பறவைகள்...
நீ வாசலில் வைத்திருக்கும்
பூசணி பூ சாட்சி என்றேன்...
எனக்காக பேசுமா
என்கிறாய்...
வாய் திறந்து பேசாமல்
இருக்கலாம்...
அவைகள் எல்லாம்
இறைவனின் சாட்சி...
உன் சுவாசத்திற்காக
துடிக்கும் என் இதயம்...
உனக்கு தெரியவில்லையா...
என் மரணத்திலும் வேண்டும்
உன் சுவாச மூச்சு.....