வெற்றி பெறுவதன் நோக்கம்

வாழ்க்கையில் நான் அடுத்து அடுத்து எடுத்து
வைக்கும் அடிகள் வெற்றி பாதையில்
பயணிக்க எனக்கு ஆசைதான்
ஆனால் சில பல சமயங்களில் அவை
தோல்விகளை தரும் -அப்போது அவை தரும் வலிகள்
சொல்லி மாளாது -இருந்தாலும்
வலியுடன் அடுத்த அடியை எடுத்து வைப்பதில்
கிடைக்கும் ஒரு சுகம் -வெற்றியில்
கிடைக்கும் சுகத்தை விட பல மடங்கு உயர்ந்தது
ஏனென்றால் அந்த வழியில் நான் சோர்ந்து போயிருந்தால்
இந்த வெற்றி எனக்கு கிடைத்திருக்காதே
வெற்றியின் நோக்கம் சந்தோஷத்தில்
திளைக்க அல்ல -தோல்விகளிடம் இருந்து
நான் கற்று கொண்ட பாடங்களுக்காக ....