நான் ஒரு இல்லத்தரசி .வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் என்று விரும்புபவள். .இறக்கும் தருவாயிலும் இந்த உலகிற்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று விரும்புபவள் .இந்த உலகில் இருப்பவர் ,இல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யுமாறு இறைவனை வேண்டுபவள்
தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் வாழ்க்கையை ,சந்தோசத்தை திருடி கொண்டு இருக்கும் அலைபேசிகளுக்கும் ,தொலைபேசிகளுக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது .அதில் இருந்து இனி இந்த மனித இனம் மீண்டு வருவது என்பது நடவாத காரியம் .அதை நாம் உணர்ந்தோமா என்றால் இல்லை ...அதுதான் நாம் வருந்த வேண்டிய விஷயம் .எத்தனை சாதனைகள் செய்தாலும் நாம் நம் நிம்மதியை அடகு வைத்துதான் சாதிக்கிறோம்.இதுதான் உண்மை .
எப்போதும் நாம் இலவசத்தை பெறுவதில் அதிக அக்கறை காட்டுவதால் வந்த வினை இது .உழைப்பை நம்பாமல் சோம்பேறித்தனத்தை மட்டுமே நம் மூலதனமாய் கொண்டதால் நாம் பெற்ற பரிசு .அதை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் .இனியாவது நாம் விழித்து கொள்வோம் நண்பரே ! 04-Jun-2018 7:49 pm
இங்கு யாரோ ஒருவர் விரித்த வலைதான் .இனையத்தில் வலைத்தளம் என்கிற பெயரில் நாம் மாட்டிக்கொண்டது அறியாமல் இறைகளை தேடி தேடி துலாவிகொன்டுதான் இருக்கின்றோம் இலவசமே எங்கள் வாய்க்கு போடும் வாய்க்கரிசி.தொலைப்பேசியுடன் ஆதார் எண் கட்டாயம் இனைக்கவும் என்றாள்.இனைத்தோம் வங்கி கணக்கு கொள்ளை போயின என்றார்கள் .ஏழை எலியோருக்கு இலவசமாக ஆடைகள். ஆதார் எண் கொடுத்தால் போதும்.ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் என்றார்கள்.ஆனாள் அவனுக்கு எத்தனை மனைவிகள் எத்தனை பிள்ளைகள் எவ்வளவு சொத்து எத்தனை வழக்கு பதிவுகள் படிப்பறிவு எவ்வளவு எப்பொழுது எங்கே ஏன்ன நடக்கிறதோ இது வெல்லலாம் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்றால் இது ஆதார் அல்ல ஆப்பூ நன்பற்களே இலவசத்திற்க்கு ஆதாறை அடகு வைக்காதீர்கள் கந்தையானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்துவிட்டு குடி. 30-May-2018 11:48 am
பெண் என்பவள் சமைக்க ,குழந்தை பெற
,ஒரு இயந்திரம் போல் வேலைக்கு சென்று சம்பாதிக்க மட்டுமா ?
இல்லை ....இனி ஒரு மாற்றம் கொண்டு வருவோம்
கல்வி கற்று கொடுப்பது தாய்
அவள்தான் நம் முதல் ஆசிரியர் !
ஆம் பெண்களை இனி கல்வியில் தன்னிறைவு பெற்றவர்களாய்
மாற்றுவோம் ....அவளுக்கு தெரியாத துறைகள் இல்லை
என்று சொல்லும் காலத்தை கொண்டு வருவோம் ..
இப்போது பெண்கள் அது போல் இருக்கிறார்கள் .
ஆனால் நான் சொல்வது கிராமங்களை சொல்கிறேன்
கிராமத்து பெண்கள் வீட்டுவேலைக்கு மட்டும்தான் லாயக்கு
என்னும் நிலையை மாற்றுவோம் .
வீரத்திற்கு பேர் போன எங்கள் கிராமத்து பெண்கள்
மற்ற திறமைகளில் மட்டும் குறைந்தவர்களா என்ன
U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?
கண்டிப்பாக நல்ல மாற்றம் .ஏன் என்றால் நாம் வாங்கும் மதிப்பெண்கள் நம் நினைவு திறனுக்கான மதிப்பெண் .ஆனால் நாம் ஒரு நல்ல அதிகாரி ஆக இது போதாதே .இந்த மாற்றத்தை நாம் அனைத்துவிதமான வேலை வாய்ப்பு கல்வியிலும் கொண்டு வந்தால் நம் அதிகாரிகள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் .அந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் இந்த மாற்றத்தை நாம் கண்டிப்பாக வரவேற்கலாம் . 26-May-2018 6:56 pm
நன்கு கற்கும் ஆவலும் தெளிவான சிந்தனையும் இருக்கும் ஆண்மைக்கு முன் எந்த தேர்வும் தூசிதான் ....அதில் சறுக்குவோரும் கையால் ஆகாதவரும் பேசுவதை விட்டு விடலாம் 26-May-2018 11:01 am
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
first of all we should improve the teaching level of the teachers.Because i am a tuition taking teacher.So i know lot about this.I would like to share this.many students even don't know to read tamil at all.they are getting compulsory pass upto 9th .In the 10th standard only they are concentrating on them.my only one request is make the teachers to focus their interest on the students from the beginning level.please teachers don't avoid the teaching and dedicate yourself to the teaching.Because dedicated teachers only teach very well.please focus on their ability,weakness,strength and their in
இது போட்டிக்காக எழுதப்பட்டதெனின்,
கீழே நிபந்தனைகளை படித்து, மாற்றம் செய்யவும்..
போட்டி விவரங்கள்
1.தலைப்பு : அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....
2.அளவு : தளத்தின் 5 பக்கங்கள்
3. ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே
5. பிழைகள் இல்லை
6. ஆண் ,பெண் திருநங்கை என தனி பரிசுகள்
7. தமிழ் மொழியில் மட்டுமே 06-Jul-2014 1:42 am
நான் பிறந்த போது கடவுள் கொடுத்த சிறகுகள்
தடவி தடவி பார்த்தேன்
உயர உயர பறந்தேன்
வானம் எட்டும் தூரத்தில் -பந்தம்
என்னும் வலையில் சிக்கினேன் -மனைவி
என்றதால் முடக்கப்பட்டன - சிறகுகள்
அடக்கப்பட்டன கற்பனை என்ற- வானம்
தாய்மை என்றதால் பறிக்கப்பட்டன -கனவுகள்
வாலிபம் கடந்தது -முதுமை
வந்தது மீண்டும் முளைத்தன -சிறகுகள்
ஆம் ,முதுமையும் குழந்தையும் ஒன்றுதான்
யாருக்கும் என்னால் உபயோகமில்லை -அதனால்
விரித்து விடப்பட்டன என் -சிறகுகள்
இனி பறக்க மாட்டோம் என்று நான்
நினைக்கவில்லை -முயற்சி செய்தேன்
இதோ பறந்துவிட்டேன் -முயற்சிக்கு
வயது ஏது-இனி வானம்
எட்டும் தூரம்தான் !