umababuji- கருத்துகள்
umababuji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [28]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [17]
எப்போதும் நாம் இலவசத்தை பெறுவதில் அதிக அக்கறை காட்டுவதால் வந்த வினை இது .உழைப்பை நம்பாமல் சோம்பேறித்தனத்தை மட்டுமே நம் மூலதனமாய் கொண்டதால் நாம் பெற்ற பரிசு .அதை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் .இனியாவது நாம் விழித்து கொள்வோம் நண்பரே !
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் .
மாற்றத்திற்கும் மாற்றம் உண்டு
கண்டிப்பாக நல்ல மாற்றம் .ஏன் என்றால் நாம் வாங்கும் மதிப்பெண்கள் நம் நினைவு திறனுக்கான மதிப்பெண் .ஆனால் நாம் ஒரு நல்ல அதிகாரி ஆக இது போதாதே .இந்த மாற்றத்தை நாம் அனைத்துவிதமான வேலை வாய்ப்பு கல்வியிலும் கொண்டு வந்தால் நம் அதிகாரிகள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் .அந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் இந்த மாற்றத்தை நாம் கண்டிப்பாக வரவேற்கலாம் .
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் .
கண்டிப்பாக ஒரு புரட்சி வரத்தான் போகிறது .அதற்கு உங்களை போன்ற பரந்த எண்ணம் கொண்ட உள்ளங்கள் தேவை .எப்படி என்று கேட்காதீர்கள் .என்ன செய்யலாம் என்று கேளுங்கள் .நம்மை மாற்ற அரசாங்கம்தான் வேண்டும் என்று நினைத்தால் அது நம் தவறு .நாம் அனைவரும் அதாவது படித்தவர்கள் அனைவரும் இணைந்து மாணவர்களுக்கு நல்ல ஒரு கல்வியை கொடுக்க முடியும் .இதற்கு வயது வரம்பு தேவை இல்லை .ஆம் பள்ளியில் கற்கும் பாடங்களை நம் எதிரே இருக்கும் உதாரணங்களை கொண்டு விளக்கினால் போதும் .அதனுடைய பயன்பாட்டையும் விளக்கினால் போதும் .எந்த துறைகளில் இதை பயன்படுத்த முடியும் என்று அவர்களை யோசிக்க செய்ய வேண்டும் .மொத்தத்தில் மாணவர்களை யோசிக்க பழக்க வேண்டும் .இதை செய்ய நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் .அந்தந்த ஊரில் இருப்பவர்கள் ஒரு குழு அமைத்து இதை செய்தால் கண்டிப்பாக நாம் வெற்றி பெற முடியும்.இதை நாங்கள் எங்கள் ஊரில் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம் .கண்டிப்பாக ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம் .
ஆண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை .ஏனென்றால் இன்று பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமைகள் இந்த மனித சமுதாயம் காணாதது .சிறு பெண் குழந்தைகளும் இன்று பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலைமை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாதது .நாகரீகம் என்பது உடுத்தும் உடையில் இல்லை என்னும் எண்ணத்தில்தான் என்பதை ஏன் நாம் உணர மறுக்கிறோம் .மேலை நாட்டினரை போல் உடை உடுத்துவது அவர்களுடைய கலாச்சாரத்துக்கு உகந்தது .ஆனால் நம் கலாச்சரத்துக்கு உகந்தது அல்ல .இதை சொல்வதால் நான் பிற்போக்கான எண்ணம் கொண்டவள் இல்லை என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் .பெண் என்பவள் இன்று ஒரு அலங்கார பாவை ஆக மட்டுமே பார்க்க படும் நிலைக்கு நாமும் ஒரு காரணம் .ஏன் ஒரு ஜான்சிராணியாய்,சரோஜினி கவிக்குயில் போல் மாற நாம் நம் எண்ணத்தில் எழுச்சியை கொண்டுவர முயற்சி செய்வதில்லை .இதை நாம் செய்து விட்டு பிறகு நாம் பேசலாம் .நன்றி சகோதரியே !
இந்த தலத்தில் காதல் கவிதைகள் தவிர மற்ற கவிதைகளை அதிகம் சேர்க்கலாமே !சினிமாகளில்தான் எங்கும் காதல் எதிலும் காதல் .அதனால்தான் நாம் என்னும் எல்லா துறைகளிலும் பின் தங்கி இருக்கிறோம் .இந்த தளத்தை உபயோகமாக பயன் படுத்தலாமே !வாய்ப்புகள்,கல்வி தகவல்கள் போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாமே !
i would like to share my articles,stories,ideas,kavithai in this website.