மாற்றம்

பெண் என்பவள் சமைக்க ,குழந்தை பெற
,ஒரு இயந்திரம் போல் வேலைக்கு சென்று சம்பாதிக்க மட்டுமா ?
இல்லை ....இனி ஒரு மாற்றம் கொண்டு வருவோம்
கல்வி கற்று கொடுப்பது தாய்
அவள்தான் நம் முதல் ஆசிரியர் !
ஆம் பெண்களை இனி கல்வியில் தன்னிறைவு பெற்றவர்களாய்
மாற்றுவோம் ....அவளுக்கு தெரியாத துறைகள் இல்லை
என்று சொல்லும் காலத்தை கொண்டு வருவோம் ..
இப்போது பெண்கள் அது போல் இருக்கிறார்கள் .
ஆனால் நான் சொல்வது கிராமங்களை சொல்கிறேன்
கிராமத்து பெண்கள் வீட்டுவேலைக்கு மட்டும்தான் லாயக்கு
என்னும் நிலையை மாற்றுவோம் .
வீரத்திற்கு பேர் போன எங்கள் கிராமத்து பெண்கள்
மற்ற திறமைகளில் மட்டும் குறைந்தவர்களா என்ன ?
கொடுப்போம் ஒரு வாய்ப்பு
ஆடையில் நாகரீகத்தை கொண்டு வர அல்ல
எண்ணங்களில் கொண்டு வருவோம் .
பிள்ளைகளை இனி உருவாக்குவது அவள் கைகளில் மட்டும் தான் இருக்கும்
ஏன்என்றால் படைத்தவளுக்குத்தான் தெரியும்
எப்படி அதை சிற்பமாக செதுக்க வேண்டும் என்று
இனி ஒரு மாற்றம் வரத்தான் போகிறது
பாரதி கண்ட பெண் இதோ வந்து விட்டாள்

எழுதியவர் : உமாபாபுஜி (26-May-18, 7:17 pm)
Tanglish : maatram
பார்வை : 535

மேலே