எதுவும் நிலையில்லை

எதுவும் நிலையில்லை
தோல்வியென்றும் இங்கு நிலையில்லை
வெற்றியும் தான் இங்கு நிலையில்லை
வெற்றிக்காரனும் ஒரு நாள் தோல்வி கொள்வான்
வீழ்ந்தவனும் வெற்றி கொள்வான்
தன்னம்பிக்கை என்றும் வீழ்ந்ததில்லை
நம் கூர்நோக்கும் என்றும் சாய்ந்ததில்லை
முயற்சி எவர் சரித்திரத்திலும் மாண்டுபோனாதாய் எழுதியதில்லை
சிந்தும் கண்ணீர் என்றும் அர்த்தமற்றதாய் இருந்ததில்லை
நாம் செய்யும் தியாகம் என்றும் வீணாய் போனதில்லை
நமக்கு செய்த துரோகம் என்றும் மறக்கப்போவதில்லை
காணும் காட்சியெல்லாம் உண்மையென்றோம்
எல்லாம் காணல் நீரென்று உணர்வோமா ?
இதன்மேலும் பொறுப்போமா ?
இனியாவது விழிப்போமா ?
தன்னம்பிக்கை என்றும் நிலைக்க வைப்போமா ?
மனம் மாறாமல் இதை மறவாமல் இருப்போமா ?
நாம் அவர்களின் உண்மை முகம் அறிந்தோம்
நாம் நம் உண்மை முகம் காட்டினால்
என்னவென்று தெரியுமோ ?
வாக்களித்தல் என்ற ஆயுதம் நம்முடையது என்று காண்பிப்போமா?
இதனை அதுவரை மறவாமல் இருப்போமா ?
இல்லை மறந்து செல்வோமா ? தெரியவில்லை
ஆனால் இதை நாம் மறந்தாலும் காலம் என்றும் மறவாது ....

எழுதியவர் : பிரகதி (26-May-18, 10:50 pm)
Tanglish : ethuvum nilaiyillai
பார்வை : 87

மேலே