தொலைந்த சிறகுகள்

நான் பிறந்த போது கடவுள் கொடுத்த சிறகுகள்
தடவி தடவி பார்த்தேன்
உயர உயர பறந்தேன்
வானம் எட்டும் தூரத்தில் -பந்தம்
என்னும் வலையில் சிக்கினேன் -மனைவி
என்றதால் முடக்கப்பட்டன - சிறகுகள்
அடக்கப்பட்டன கற்பனை என்ற- வானம்
தாய்மை என்றதால் பறிக்கப்பட்டன -கனவுகள்
வாலிபம் கடந்தது -முதுமை
வந்தது மீண்டும் முளைத்தன -சிறகுகள்
ஆம் ,முதுமையும் குழந்தையும் ஒன்றுதான்
யாருக்கும் என்னால் உபயோகமில்லை -அதனால்
விரித்து விடப்பட்டன என் -சிறகுகள்
இனி பறக்க மாட்டோம் என்று நான்
நினைக்கவில்லை -முயற்சி செய்தேன்
இதோ பறந்துவிட்டேன் -முயற்சிக்கு
வயது ஏது-இனி வானம்
எட்டும் தூரம்தான் !

எழுதியவர் : உமா பாபுஜி (2-Jul-14, 10:27 am)
சேர்த்தது : umababuji
பார்வை : 380

மேலே