அந்நிய தேசத்து அடிமைகள்
அரபி பேசும்
சவுதி காற்றும்;
பாத்திரம் உருக்கும்
கோடை வெயில்;
புழுதி பறக்கும்
வாடை காற்றில்;
வியர்வை வழியுது
லிட்டர் லிட்டராய்;
ரத்தம் சுண்டுது
துளி துளியாய்;
மனைவி கெஞ்சுவதும்
பிள்ளை கொஞ்சுவதும்
காதில் கேட்குது
கைப்பேசி அணைத்தப்பின்னும்;
பகலெல்லாம்
வேலை பாலையில்;
இரவிலோ
தூக்கம் மூலையில்;
எப்பொழுதும்
துக்கம் மூளையில்;
ஆண்ட ஆங்கிலேயனை
விரட்டிவிட்டோம்;
விரும்பி வந்து
அடிமை பட்டோம்
அந்நியனிடம்;
நாம்
அந்நிய தேசத்து
அடிமைகள்...