நட்புமாறியதேன்

எது பேசினாலும்..
சரியாகவே எடுத்துக் கொள்ளும்..
மனம் விட்டு பேச குறையும் மனபாரம்..
மௌனத்தை கூட சரியாக புரிந்து கொண்டு..
சுமை தாங்கியாகும்..
அந்த கால நட்பு..
எது பேசினாலும்..
பொருளை ஊடுருவி ஆராயும்..
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும்..
பேச பேச சுமையேற்றும் மனதில்..
இந்த கால நட்பு..
' நட்பு ' மூன்றெழுத்து வார்த்தையில்..
எழுத்துக்களும் மாறவில்லை..
வார்த்தையும் மாறவில்லை..
நட்பென்ற உணர்வில்..
பொருள் மாற்றம் மட்டும் ஏன்?

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (14-Dec-25, 10:38 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 9

மேலே