பாரதி

பாரதி
இவன் பூணூலை
விடுத்தது பா நூலை அணிந்தவன்
மூடநம்பிக்கை விதைப்போர் யாராகினும்
எதிர்க்கத் துணிந்தவன்

இந்த சுப்பிரமணி
அடித்த மணிதான்
அறியாமை இருளில்
மூழ்கிக்கிடந்தோரை எழுப்பியது
உலகம் மட்டும் இவரை மழுப்பியது

இவன் அணிந்த கருப்பு ஆடை
விரட்டியடித்தது
சமூக விரோத கருப்பு ஆடை

இவன் மேல்வகுப்பில் பிறந்து
கீழ்வகுப்பை ஏற்றவன்

இவன் கலைவாணியின்
கைநழுவி மண்ணில்
விழுந்த வீணை
இவனின் மோனை
அச்சமில்லை என்றது வானை
இது தெரியாது
இவனை மிதித்தது யானை

இவன் பாரதி
எனும் பாட்டு நதி

இவன் கவி புனையும்
சுந்தரன் வேதம் ஓதாத மந்திரன்
ரஜினிக்கு முன் பிறந்த எந்திரன்
பகைவரை பார்வையால்
வீழ்த்தும் மின்திறன்
சாட்டையடி கொடுக்கும்
இவன் பண் திறன்

தமிழ் கண்ட விக்கலை
சிக்கலை முட்களை
கலைந்தது இவன்
இயல் இசை நாடக முக்கலை

உலைவைக்க அரிசி
இல்லாவிட்டாலும் இவன்
அரசனாகத்தான் வாழ்ந்தான்

மா மழை பொழியும் வானம்
இவன் நடந்தால் பா மழை பொழியும்
அது இவன் பெற்ற ஞானம்

இவன் குயில் பாட்டு
எழுதிய குயில்

எழுதியவர் : (1-Jul-18, 8:41 pm)
Tanglish : baarathi
பார்வை : 49

மேலே