suganya raj - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : suganya raj |
இடம் | : chidambaram |
பிறந்த தேதி | : 04-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 983 |
புள்ளி | : 130 |
..
பண்டைய தமிழன் மறந்த மொழி!
பாடல்களில் மட்டுமே பதியப்படுகின்ற மொழி !!
பால் பற்கள் உச்சரிக்க மறந்த அழகு தமிழ் சொல்
தற்போது பிச்சைக்காரர்களுக்கு சொந்தமாகிவிட்டதே!...
ஏன்;;??
பல படைப்பாளிகள் பிறந்ததோ தமிழ் மண்ணில்
அனால்
அடிமையானதோ அந்நியரின் சில்லைறைக்கோ ???
தாவரங்கள் கூட தலை அசைக்கும்..
எம் தமிழ் மைந்தன்..
காலடி ஓசை கேட்கும்போதெல்லாம்!!
ஓசைக்கு பெயரும் வைத்தான் !
ராகம் என்றும்! தாளம் என்றும்!!
மெட்டுக்கள் இசைத்த என் தமிழ் மங்கையரின்
விழித்துடிப்புகள் எங்கே போனது??
மஸ்காரா போட்டு மறைத்தது
மங்கையரின் கண்களை மட்டுமல்ல !!
பல ஆயிரம் காதல் கவிதைகளையும் தான்!!
தாலாட்ட
பொதுவாக
பெண்களை தான்
பூக்களை கொண்டு வர்ணிப்பார்கள்
அதனால் தான்
உன்னை வாழ்த்த
பூக்களிடமே சென்று
வாழ்த்து மடல் எழுதி
வாங்கி வந்தேன் !!
ரோஜா பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் நாங்களே ரசிக்கும் ரசிகன்
அதனால் வாழ்த்த எங்களுக்கு தகுதி இல்லை என்றது
மல்லி பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட மேன்மையானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது
அள்ளி பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதி வாங்க
அவன் எங்களை விட அன்பானவன்
அதனால் எங்களுக்கு தகுதி இல்லை என்றது
தாமரை பூவிடம் சென்றேன்
வாழ்த்து மடல் எழுதிய் வாங்க
அவன் எங்களை விட தன்மையானவன்
விரும்பும் போதெல்லாம்
வெறுக்க நினைக்கும்
உறவுகளை
விட
வெறுக்கும் போது கூட
நம்மையே விரும்பும்
தனிமையே
சுகம்தான்...!!
நீல
மேகங்கள்
சூழ ...!
டும் டும்
இடி ஒலிகள்
தாளங்கள்
தட்ட..!
பளிச் பளிச்
மின்னல்கள்
மின் விளக்குகள்
தோரணம் இட..!
சூரியன்
மறைந்து
ஆனந்த
கண்ணீர் விட..!
தூரல்கள்
மாலை
தோரணமாய்
தொங்க..!
மேகம் எனும்
மணவாளன்
பூமி எனும்
புனிதவதிக்கு ..!
கட்டுகிற
தாலி
தான்
இந்த
மழையோ???
"அம்மா"
அழுகையை அமர்த்தும் சொல்
அவள் பால் ஊட்டும் வரை...!
"அம்மா"
மழலை மொழிக்கு முதல் சொல்
மற்ற மொழிகள் அறியும் வரை...!!
"அம்மா"
அன்புக்கு பிறிதொரு சொல்
அபிமானம் மாறும் வரை...!!
"அம்மா"
அரவணைக்கும் சொல்
அழுகை குறையும் வரை...!!
"அம்மா"
கவலையை குறைக்கும் சொல்
கண்டிப்பை தொடங்கும் வரை...!!
"அம்மா"
இனிமையான சொல்
இன்னொருவள் கிடைக்கும் வரை...!!
"அம்மா"
முன்னேற்றம் தரும் சொல்
முடிவை அறியும் வரை,,,!!
அனால்
எனக்கு
"அம்மா"
என் உயிரில் கலந்திட்ட சொல்
உயிர் பிரியும் வரை ...!!
நான்கு ஆண்டுகள்
கருவில் சுமந்து வந்த கல்லூரி
கருகலைப்பு செய்கிறது ஏனோ இப்போது...!
என் கண்களில் கண்ணீர் துளிகள் சிந்த
கற்பனை செய்து பார்க்கிறேன்
என் கல்லூரி நாட்களை..!
அறிமுகம் இல்லாது நுழைந்த
முதல் நாள் கல்லூரி
கண்கள் எட்டும் தூரம் வரை புது முகங்கள்...!
வேடிக்கை பார்த்து
நான்கு நிமிடங்கள் ஆகிறது
என்று என்னும் தருணம்
முடிவடைந்து விட்டது நான்கு வருடங்கள்...!
நாங்கள் விளையாடின வகுப்பறைகள்
சுற்றித்திரிந்த விளையாட்டு மைதானங்கள்
கேளிக்கை செய்த ஆண் பெண் நண்பர்கள்
கடிந்தும் கவனித்து கொள்ளும் ஆசிரியர்கள்...!
தோழமையின் பெயரில்
தாய்கள் பல கண்டோம்
படைத்த இறை
திரை சீலை சீதனமும்!
தெருவெங்கும் தோரணமும்!
மத்தாப்பு சுட்டு போடும்
மஞ்சள் வெயிலும்!
மணமேடை சுத்தி வரும்
சின்னஞ் சிறுசும்!
கல்யாண சேதி சொல்லும்
கொட்டு மேளமும்!
புழக்கடையில் வந்து நிற்கும்
கறி கிடாவும்!
கல்யாண சொந்தம்தானே
எப்பொழுதுமே!!!
வாழையிலை வரைந்திடுமே
மதுரை ஓடும் வைகையினை!
திண்ணை எல்லாம் சேர்த்திடுமே
தென்பொதிகை திருத் தமிழை!
கோலம் போடும் பதுமைகளை
குறிசொல்லி கவிழ்த்திடவே கூடிடுதே
காளையெல்லாம் கூட்டம் கூட்டமாய்!!!
சீரு செய்யும் மாமன்
சோறும் எடுத்து கட்டும்
எதுத்த ஊரும்!
பந்தயம் இங்கே பட்டாசாக
வெடிச்சு சிதறும்...
கூரை சேலை சேதி
சொல்லும்! கூனி கிழ
என் காதலுக்கும்
உன் காதலுக்கும்
இடையே
இருக்கும்
ஒரே
உறவு
நம் கண்ணீர் தான்!!!
ஒரு பொய்யால்
உன்னை புன்னகிக்க
வைக்க முடிந்தது..
அனால் உண்மையால்
உன் உறவை
பாதுகாக்க முடியவில்லையே..!
கருவுற்ற தாயின்
வயிற்றிற்குள் உள்ள
கருவாக..
என் மனதிற்குள்
நம் காதலை உயிராக்கி
வைத்திருந்தேன்..
உன் பாசத்தால்
என்னை பிரசவித்து விடு
வலி இல்லாத
பிரசவம்
என்னவென்று
நானும் தெரிந்துகொள்கிறேன் ..!!
உலகத்தின் தாய் அந்த உழைப்பாளி!
ஊருக்கே சோறு போடும் விவசாயி!
உலகத்தை முன்தள்ளும் உழவன் அவன்!
உழவனை பின்தள்ளும் உலகம் இது!
உணவேதும் நமக்கில்லை அவனின்றி.
உணவென்று ஏதுமில்லை அவனுக்கு.
பால் குடித்த மார்காம்பை கடித்துவிட்டோம்.
சோறூட்டிய விரல்களை ஒடித்துவிட்டோம்.
செந்நீரும் கண்ணீரும் சிந்திவிட
மண்நீரில் தண்ணீர் கலந்துவிட
பதநீரும் இளநீரும் நாம் பருக
பாடுபடும் நம் நண்பன் விவசாயி!
இயற்கைக்கு கேடு செய்யும் நம்மை போல
இயற்கையும் பலசமயம் பொய்த்துப்போக
இயற்கையின் அச்சாணி அவன் வாழ்வு
இயற்கை எய்த காரணமாய் ஆகிறதே!
மண்மீது வைத்த நம்பிக்கை மண்ணாகிப்போக
விண்மீது வைத்த நம்பிக்கை வீண