தாலி

நீல
மேகங்கள்
சூழ ...!

டும் டும்
இடி ஒலிகள்
தாளங்கள்
தட்ட..!

பளிச் பளிச்
மின்னல்கள்
மின் விளக்குகள்
தோரணம் இட..!

சூரியன்
மறைந்து
ஆனந்த
கண்ணீர் விட..!

தூரல்கள்
மாலை
தோரணமாய்
தொங்க..!

மேகம் எனும்
மணவாளன்
பூமி எனும்
புனிதவதிக்கு ..!

கட்டுகிற
தாலி
தான்
இந்த
மழையோ???

எழுதியவர் : சுகன்யா ராஜ் (28-May-14, 7:30 pm)
Tanglish : thaali
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே