தமிழ்

பண்டைய தமிழன் மறந்த மொழி!
பாடல்களில் மட்டுமே பதியப்படுகின்ற மொழி !!

பால் பற்கள் உச்சரிக்க மறந்த அழகு தமிழ் சொல்
தற்போது பிச்சைக்காரர்களுக்கு சொந்தமாகிவிட்டதே!...
ஏன்;;??

பல படைப்பாளிகள் பிறந்ததோ தமிழ் மண்ணில்
அனால்
அடிமையானதோ அந்நியரின் சில்லைறைக்கோ ???

தாவரங்கள் கூட தலை அசைக்கும்..
எம் தமிழ் மைந்தன்..
காலடி ஓசை கேட்கும்போதெல்லாம்!!
ஓசைக்கு பெயரும் வைத்தான் !
ராகம் என்றும்! தாளம் என்றும்!!

மெட்டுக்கள் இசைத்த என் தமிழ் மங்கையரின்
விழித்துடிப்புகள் எங்கே போனது??
மஸ்காரா போட்டு மறைத்தது
மங்கையரின் கண்களை மட்டுமல்ல !!
பல ஆயிரம் காதல் கவிதைகளையும் தான்!!

தாலாட்டு பாட துவங்கிய மொழி
தற்போது
தடையும் இல்லாமல் போனது எங்கே??

இந்த அழகு மொழியை
திரை உலகம் மறைத்ததா???
அல்லது
திடீர் மனிதன் மறந்தானா??

மழலையின் கைகளுக்குள் இருக்கும்
மண்வாசம் சொல்லும்
தமிழின் மரபு என்னவென்று ???

சற்றே
செவி
சாய்த்து
கேளுங்களேன் !!

எழுதியவர் : சுகன்யா (3-Aug-16, 12:53 pm)
சேர்த்தது : suganya raj
Tanglish : thamizh
பார்வை : 101

மேலே