நெஞ்சம் நினைப்பதெல்லாம்

நெஞ்சம்
நினைப்பதெல்லாம்
நடப்பதில்லை.....
மாறாக
நெஞ்சில் வலிசுமந்து
நாளும்
பொழுதும்
கடக்கிறது......!!

ஒரு பூங்காற்று
போல
என்னுள் வந்தவள்.....
இன்று
புயலடித்து
கலங்கிய தேசத்தில்
அநாதை
ஆக்கினாள்
என்னை......!!

விரல்கள் கோர்த்து
போகும் பாதைகள்
மறந்தோம்.....
சிறகில்லை
ஆனால்......பறவைகளோடு
பறந்தோம்.....
சிறு பிரிவில்
சின்னச் சின்னதாய்
இறந்தோம்......!!

எனக்கென
நீ
பிறந்தாய்....என்றிருந்த
எண்ணத்தில்.....
இடிவிழுந்தது.....கண்டு
துடித்து
வீழ்ந்தேன்
இன்றுவரை மீளவில்லை.....!!

காலைப் பனியில்
கவலை
மறந்த
சூடான தேநீரில்
குளிரைக்
கொன்றோம்.....
போதவில்லை
என்று
என்னைப்
போர்வையாக்கிய
நிமிஷங்கள்
ஆயுள்கால
அவஸ்தைதான்.....!!

காதலை
வளர்த்தேன்.....
கவலைகள்
வளரும் போதும்.....
தீராத
காதலில்
தீவிரவாதி ஆனேன்.....
என்றும்
உன்மீது
என் காதல்
உயிரோடு
வாழும்......

என் வாசலில்
தென்றல்
வருமா.....வராத
என்கிற கேள்விகள்
இருந்தாலும்
வருந்த மாட்டேன்
வருவாய்
என்கிற நம்பிக்கையில்......!!

தனியானேன்......
தணியாத
காதலோடு......
என் உயிருக்கு
நீதானே
மூச்சு.....இப்படித்தானே
என் வாழ்நாள்
கடந்துபோச்சு......!!!!

எழுதியவர் : thampu (3-Aug-16, 1:11 pm)
பார்வை : 224

மேலே