வெறும் உடலை விற்பது காதல் அல்ல உயிரை கொடுப்பதே
தடவிக் கொள்வது காதல் அல்ல
தழுவிக் கொள்வது காதல் அல்ல
வருடிக் கொள்வது காதல் அல்ல
அன்பே இல்லாமல்
வெறும் காமம் மட்டும் கொண்டால்
மனதிலிருந்து வர வேண்டும்
உண்மை காதல்
பல மைல் தூரங்கள்
இருந்தாலும்
நினைவால் சேர்ந்திருக்கும் எண்ணம்
நேரில் பார்த்துக்கொள்ளும்
அந்த கணம்
மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்ளும்
இப்படியே இருந்துவிடலாம்
இல்லை இறந்து விடலாம்
என்றுமே நீ என் சொந்தம்
நான் உன் அங்கம்
உன்னை பிரிந்து
வாடினேன்
இன்றோ
கண்ணால்
பார்க்கும் தூரத்தில்
இருக்கிறாய்
இனியும் உன்னை பிரிந்திருப்பேனா
இனியும் என் கால்கள் நிற்குமா
ஓடி வந்து கட்டிபிடித்து
உச்சி முகர்ந்து
மயங்கி விழுந்தது
உயிரின் மடியில்
இனி இவள்
வாழ்வதும்
சாவதும்
உன்னோடு தான்
~ பிரபாவதி வீரமுத்து