கல்லூரியின் கடைசி நாட்கள்
நான்கு ஆண்டுகள்
கருவில் சுமந்து வந்த கல்லூரி
கருகலைப்பு செய்கிறது ஏனோ இப்போது...!
என் கண்களில் கண்ணீர் துளிகள் சிந்த
கற்பனை செய்து பார்க்கிறேன்
என் கல்லூரி நாட்களை..!
அறிமுகம் இல்லாது நுழைந்த
முதல் நாள் கல்லூரி
கண்கள் எட்டும் தூரம் வரை புது முகங்கள்...!
வேடிக்கை பார்த்து
நான்கு நிமிடங்கள் ஆகிறது
என்று என்னும் தருணம்
முடிவடைந்து விட்டது நான்கு வருடங்கள்...!
நாங்கள் விளையாடின வகுப்பறைகள்
சுற்றித்திரிந்த விளையாட்டு மைதானங்கள்
கேளிக்கை செய்த ஆண் பெண் நண்பர்கள்
கடிந்தும் கவனித்து கொள்ளும் ஆசிரியர்கள்...!
தோழமையின் பெயரில்
தாய்கள் பல கண்டோம்
படைத்த இறைவனுக்கும்
இயன்றாத இவ்வரம்..,.!
இப்படி குழந்தைத்தனமாய்
சுற்றித்திரிந்த என் கல்லூரி காலங்கள்
கதவை திறந்து காத்திருக்கிறது
எங்களை வழி அனுப்ப..!
இறுதி நாட்கள் கல்லூரியில் நின்று
நினைத்து பார்க்கையில்,
நின்று போக கூடாத
என் உயிர் என்று ஏங்கியது என் மனம்...!
இப்படியே இந்த உலகம்
உறைந்து போக கூடாத என்று
ஒரு கற்பனை தவிப்பு எனக்குள்ளே...
வலிகளும் வேதனைகளும் பல தோன்ற
அதனுடன் தோன்றியது கண்ணீர் துளிகள்..!
கலைந்து செல்லும் கார் மேகங்களாய்
சற்றென்று வானத்தை விட்டு மறையும் வானவில்லாய்
இன்று பிரிந்து செல்ல போகிறேன்
என் நண்பர்களை..!
என் கல்லூரியில்
நான் நின்று நினைத்த இக்கடைசி நிமிடங்கள்
என்னுள் நிலைக்க வேண்டுகிறேன் என் நினைவுள்ளவரை..!!!