விடுதலை போரில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு பாகம்-1
இன்றைய நம் சுதந்திர சுவாசத்துக்கு காரணமாக இருந்த சுதந்திர போராட்டத்திற்காக தன் இன்னுயிர் ஈந்த அனைவருக்கும் நம் மரியாதையை செலுத்துவோம் அதே நேரத்தில் இந்திய சுதந்திரம் இன்றைய ஃபாசிஸ்ட்டுகள் கூறுவதைப்போல் காவிகளால் பெறப்பட்டதல்ல மாறாக இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்த சுதந்திரம் பெறப்பட்டது. இன்று இந்தியாவை இந்து மயமாக்குவோம் என்று முழங்கும் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் அன்று காட்டிக்கொடுப்பவர்களாகவே இருந்தனர்.
ஏன் வாஜ்பாயும் கூட காட்டிக்கொடுத்தவர்களில் ஒருவர் அதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது. இந்திய தேசப்பிதாவை சுட்டுக்கொன்றவர்கள் இந்த பார்ப்பன பாசிஸ்ட்டுகள். எம் முன்னோர்கள் குருதி சிந்தி மீட்டெடுத்த இந்தியாவில் இன்று பாசிஸ்ட்டுகள் எம் இனத்தின் தேச பக்தியை கேள்விக்குறியாக்கி எம் இனத்தின் ரத்தத்தில் தோய்த்த காவி கொடிகளை எம் இனப்பென்களின் வயிற்றை கீறி எடுத்த முஸ்லிம் சிசுக்களின் குடல் நரம்புகளை கயிறாக கொண்டு ஏற்றுகின்றார்கள்.
இந்திய சுதந்திரத்திரத்திற்காக குருதிபுனலோட்டி இன்னுயிர்களை ஈந்த எம் முஸ்லிம்கள் இன்று தேசதுரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் அடையாளப் படுத்தப்படுகின்றார்கள். குஜராத்திலும் மும்பையிலுமாக இந்தியாவெங்கும் எம் இன மக்களின் குருதியோட்டப்படுகின்றது. தியாகத்தின் அடையாளமான ஓர் இனத்தையே தேச துரோகிகளாக சித்தறிக்க முற்படுகின்றது தேசப்பிதாவை கொன்று சுதந்திர போராட்ட வீரர்களை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுத்த வீர சாவர்க்கரின் பாசிச கும்பல் . இந்த ஃபாசிஸ்'டுகளின் கரமெங்கும் ரத்தம் ....தேச பக்தர்களை கொன்ற ரத்தம் ...இவர்களின் வரலாரெங்கும் துரோகங்கள்...
இந்த சுதந்திர தினத்தில், இந்திய சுதந்திரத்திற்காக போராடி தன் இன்னுயிர்களை ஈத்த ஓர் போற்றப்பட வேண்டிய சமுதாயம் அடிமையாகவும், துரோகிகளாகவும், தீவிரவாதிகளாகவும் நடத்தப்படுகின்றார்கள். அந்த சமுதாயத்தின் கடந்த கால சுதந்திர போராட்ட வரலாறுகளை இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டி சில சான்றுகளை கீழே பதிகின்றேன்.
(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர் இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
தொடரும்.........