அம்மா
"அம்மா"
அழுகையை அமர்த்தும் சொல்
அவள் பால் ஊட்டும் வரை...!
"அம்மா"
மழலை மொழிக்கு முதல் சொல்
மற்ற மொழிகள் அறியும் வரை...!!
"அம்மா"
அன்புக்கு பிறிதொரு சொல்
அபிமானம் மாறும் வரை...!!
"அம்மா"
அரவணைக்கும் சொல்
அழுகை குறையும் வரை...!!
"அம்மா"
கவலையை குறைக்கும் சொல்
கண்டிப்பை தொடங்கும் வரை...!!
"அம்மா"
இனிமையான சொல்
இன்னொருவள் கிடைக்கும் வரை...!!
"அம்மா"
முன்னேற்றம் தரும் சொல்
முடிவை அறியும் வரை,,,!!
அனால்
எனக்கு
"அம்மா"
என் உயிரில் கலந்திட்ட சொல்
உயிர் பிரியும் வரை ...!!