போய் வருகிறேன்-வித்யா
நிஜ உலகிலிருந்து
சற்றே விலகியிருக்கும்
என்னிலை உணர்ந்தவளாய்
இன்று நான்.......!
ஆதலால்
போய் வருகிறேன்.......!
விடை பெறுகிறேன்....!
எனக்கு புரிகிறது
என் அருகாமையையும்
விரும்பும் சிலர்......
இருக்கத்தான்
செய்கின்றனறென்று....!
எனக்கான நிஜங்களை
தேடும் தீவிரத்தில்
என் நிழலையும்
கூட சற்றே விலகி
இருக்க சொல்லுகிறேன்.......!
சில நேரங்களில்
என்னால் சுவாசிக்கக்கூட
முடிவதில்லை.........
படுக்கையில் சாயும்போது
நீரின் ஆழத்தில் மூழ்கி
மூச்சு முட்டுவதாய்
ஒரு உணர்வு.......!
சுகங்கள், துக்கங்கள்
விருப்புகள்,வெறுப்புகள்
நான் முகம் பார்க்கும்
கண்ணாடியில் பட்டு தினம்
கோர முகங்களை பிரதிபலிக்கும்......!
விழித்திரை கிழித்துச்சென்ற
கூர் நகங்கள்
விழி விழிம்பில்
தப்பிச்செல்லும்......!
எஞ்சிய வெற்று
கிண்ணத்தின்
அடியாழம் வரை
சென்று தேடுகிறேன்
பசித்தீர்க்க எனக்கென்று
எதுவுமில்லை........!
எனக்கென்று எதுவுமே
இல்லாதபோது.....
நீ மட்டும் எதற்கு
இங்கிருக்கிறாய்.....?
ஏன் எனை உன்னைபோலவே
மாற்ற முயற்சிக்கிறாய்....?
என் கைகளை
இறுக பிடித்துக்கொண்டு
விட மறுக்கிறாய்.....?
எனை விட்டு
போய்விடு.......
நான் உனக்கான
நிலையற்றவள்....!
இல்லையேல்
நான் நீங்கி
போகும் நாளில்
மரணம் உயிர்ஜனிக்கும்
உன்னில்.............!
உயிர் மரணித்திருக்கும்
என்னில்.........!
நான் போய் வருகிறேன்.....
கவலைகள் வேண்டாம்.
நான் நிஜத்தை தேடித்தான்
பயணப்படுகிறேன்......!
போய் வரவா......?
போய் வருகிறேன்........!
விடை பெறுகிறேன்.....!