மனம்

மனித மனம் ---

சில நொடிகள்
இறையை தேடும் ...

நொடி பொழுதினுள்
உலகினை நாடும் ...

சில பொழுதில்
விலங்காய் மாறும் ...

மறு நொடியே
பறந்தோடி போகும் ...

ஒரு முறை
குரங்காய் தாவும் ...

மறு முறை
சிறையுள் ஒடுங்கும் ...

சில முறை
நதியாய் ஓடும் ...

பல முறை
அன்ன நடை போடும் ...

சில நேரம் -
நிலையற்று தறி கெட்டு
'தான்' என்ற
அகந்தையால் வாடும் ...

தெளிந்த பின் --
தடுத்தாட்கொண்ட
இறைவனை சரணடையும் !!!

எழுதியவர் : த.ராமிஷா (24-May-14, 4:19 pm)
Tanglish : manam
பார்வை : 84

மேலே