எ ப்பொழுதும் ஒரு ஏ க்கம் ,,

' எ ' ப்பொழுதும் ஒரு ' ஏ ' க்கம் ,,//

'' எமது பாரதத்தில் ,
என்னைப்போல் உள்ளவர்களின் ஒரு ,
ஏக்கம் இதோ ,
ஏய் ,
எல்லைப்பகையாளியே நாங்கள் ,
ஏமாருவொமென ,
எதிர்ப்பார்க்கிறாயா ,
ஏமாறமாட்டோம் உன்னை
எல் அளவு கூட உள்ளே நுழைவதற்கு ,
எங்கள் நாட்டினுள் ,
ஏற்றத்தாழ்வுகள் கிடையாது ,
ஏமாளி ஆவதற்கு ,
எதிர்த்து போராடுவோம் ,
ஏனெனில் இங்கே ,
எதிர் நீச்சல் போட்டு போராடிய ,
ஏகலைவர்களை கொண்ட பாரதம் ,
எங்கள் அன்னை பாரதம் ,
ஏய் அந்நிய நாட்டவனே ,
எங்கள் நாட்டினை ,
எதிர்க்கொள்ள நினைக்காதே ,
எங்கள் பாரத மண்ணில் உங்களை ,
எதிர்ப்பதற்கு 'காந்தி ' வழியும் தெரியும் ,
எதிர் நீச்சல் போட்ட 'சுபாசு ' வழியும் தெரியும் ,
ஏட்டினை புரட்டிப்பார் ,
எங்களை ,
எதிர்ப்பதற்கு நீ யோசிப்பாய் அவரவர் ,
எல்லைக்கோடு ,
என்பது மதிக்கத்தக்கது ,
எட்டிப்பார்ப்பதற்கு கூட உரிமை கிடையாது ,
எதிர்ப்பவர்கள் ,
எவராயினும் இணையும் வரை ,
எங்களுக்கு ,
ஏர் உழ கலப்பையும் பிடிக்கத்தெரியும் ,
ஏவுகணைகளையும் பிடிக்கத்தெரியும் ,
எதற்கும் அஞ்சாதவர் ,
எலிக்கு பயப்படுவானே ஓடிவிடுங்கள் ,
எருவாக்கி விவசாயத்திற்கு தூவி விடுவோம்
எங்களது நாட்டினுள் ,
எட்டப்பனைப்போல் உள்ள கயவர்களே வெளி ,
ஏரி விடுங்கள் இந்த 'பூ ' லோகத்தை விட்டு ,
எங்கள் பாரதத்தினுள் உள்ளவர்களை ,
ஏட்ச்சி பிழைக்க ,
எண்ணாதீர் ,
எரித்து விடுவோம் ,
எங்களை ,
எதிர்ப்பதர்க்குள் ,
ஏன் ?
எப்படி ?
எதற்கு ?
எங்கு ?
என வினாக்களை (த்)தொடுத்திடு ,
ஏமாளித்தனத்தை போக்கிக்கொள்வாய் ,
எண்ணத்தில் ,
ஏற்ப்படுவதை ,
ஏட்டினிலே ,
எழுதிவைத்தலாகாது ,
ஏற்பாடுகளை செய்து ,
எடுத்த காரியத்தில் ,
எழுச்சியை காண வேண்டும் ,
என்பதே உத்தமம் ,,,,,,

எதார்த்தத்தை
எழுதியவர் உங்கள் சிவகவி ,,,,,

எழுதியவர் : சிவகவி (24-May-14, 4:19 pm)
பார்வை : 203

மேலே