உலகமே ஓர் மனநல காப்பகம் - அரவிந்த் C

அறியா பருவத்தில்
அறியவில்லை..
என் நினைவறிந்த வயதில்
அறிந்தேன்,

இப்புவி
"ஓர் மனநல காப்பகம்"
மனிதர்கள் அதில்
மனநலம் பாதிக்கப்பட்ட
நோயாளிகள்... !

வன்முறைகளுக்கிடையில்
வாழும் ஒரு நிலை..
ஜாதி மதம்
என்னும் சகதியில் உளன்று
வெளியேற மறுக்கும்
மதியிழந்த மனிதர்கள்...!

கடிவாளம் கட்டிய
கழுதையாய்,
படிப்பின் பின்
மதிப்பெண் முன்
செல்லும் பல மனிதர்கள்...

பட்டப்படிப்பு படிக்கிறோம் என்றுரைத்து
பகுத்தறிவை புதைத்தோம்
நம்மில் பலர்.....

இயந்திரமயமாக்கி
இன்பம் இதுவென்று
அவரவர் மனதிற்குள்
பொய்யுரைத்து
புழுங்கிக் கொண்டிருக்கிறோம் நாம்...
இந்நிலை மாறுமோ...?

விடியாத இரவு என்று ஒன்று
கிடையாது இவ்வுலகில்...
இப்படியொரு உலகில் உதித்துவிட்டு
விடியாத மனதுடன்
வளம் வரும் வினோத மனிதர்கள்...

என் மனதும் விடியவில்லை
முழுதுமாய்..
விடியலை வரவேற்க
காத்துக்கிடக்கிறேன்..
என் வாழ்க்கை வழிகளில்...

எழுதியவர் : அரவிந்த் .C (24-May-14, 4:19 pm)
பார்வை : 858

மேலே