என்ன செய்ய போகிறாய்?

உலகத்தின் தாய் அந்த உழைப்பாளி!
ஊருக்கே சோறு போடும் விவசாயி!
உலகத்தை முன்தள்ளும் உழவன் அவன்!
உழவனை பின்தள்ளும் உலகம் இது!

உணவேதும் நமக்கில்லை அவனின்றி.
உணவென்று ஏதுமில்லை அவனுக்கு.
பால் குடித்த மார்காம்பை கடித்துவிட்டோம்.
சோறூட்டிய விரல்களை ஒடித்துவிட்டோம்.

செந்நீரும் கண்ணீரும் சிந்திவிட
மண்நீரில் தண்ணீர் கலந்துவிட
பதநீரும் இளநீரும் நாம் பருக
பாடுபடும் நம் நண்பன் விவசாயி!

இயற்கைக்கு கேடு செய்யும் நம்மை போல
இயற்கையும் பலசமயம் பொய்த்துப்போக
இயற்கையின் அச்சாணி அவன் வாழ்வு
இயற்கை எய்த காரணமாய் ஆகிறதே!

மண்மீது வைத்த நம்பிக்கை மண்ணாகிப்போக
விண்மீது வைத்த நம்பிக்கை வீணாகிப்போக
தன்மீது தன்னம்பிக்கை இழக்கின்றான்
தற்கொலையை குடும்பத்தோடு செய்கின்றான்.

விலைமதிப்பில்லா விவசாயி வாழ்க்கையிலே
விடியல் என்ற பேச்சிற்கு இடமுண்டா?
நமக்கென்ன என்று நாம் இருக்கின்றோம்
நம் தலைமுறை என்ன உணவுதேடா எந்திரமா?

எழுதியவர் : hujja (11-Jan-13, 7:38 am)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 6908

மேலே