முத்தமிழன்னை போற்றி

முக்கண்ண னுடனுறைந்து
முத்தெனவே முன்பிறந்து
முச்சங்க மதனையமைக்க
முச்சுடரா யொளியளித்தாய்

மூச்சிரைக்கு மென்யாக்கைதனில்
முக்தி நல்கும் நன்மொழியென
முக்காலமு மருட்கடைவாய்
முழக்கமோடெ ன்னகமிருந்து
முத்தமிழாய் நீ மலர்வாய்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (7-Aug-20, 10:46 am)
பார்வை : 73

மேலே