பழுதிலா சொற்கொண்டு பூத்த கவிதை
பழுதிலா சொற்கொண்டு பூத்த கவிதை
விழுதிட்ட ஆலமர மாய்தழைத்து ஓங்கும்
பழுதான புற்றீசல் போலிக் கவிதைகள்
விழுந்து மடியும் இலக்கிய வீதியிலே !
பழுதிலா சொற்கொண்டு பூத்த கவிதை
விழுதிட்ட ஆலமர மாய்தழைத்து ஓங்கும்
பழுதான போலி இலக்கியமே டையில்
எழுந்துநிற் காதுவீ ழும் !
-----முறையே கலிவிருத்தம் இன்னிசை வெண்பா