தமிழ்ப்பால்

தாய்ப்பாலின்றி தரணியில் பிறந்தேன்

தமிழ்ப்பால் அருந்திடவே

உனக்கே மகளானேன்

இதயத்தை அறுத்தாலும்

இசைத்திடுவேன் தமிழ் மொழியே!

மதிகெட்ட மாந்தர் என்னை
மனமின்றி கேட்கின்றனர்

எங்கே உன் தமிழன்னை?
மயங்காமல் நான் சொன்னேன்
மார்பகத்தில் சுரக்கின்றாள்.

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 9:45 pm)
பார்வை : 926

மேலே