உளரல்
பணிக்காக பணிக்கப்பட்டோர் யாவரும்
பணத்தின் பால் மோகங்கொண்டு
பணியிலிருந்து விலகி பழிச்செய்யின்
பிணியாகுமே அமர்ந்தத் துறை
அளவுடன் புசிப்பின் உடல்
ஆரோக்கியமாய் திகழும் நாளும்
அளவு மிஞ்சிய உணவால்
ஆபத்து நிகழும் உயிர்க்கு
அருகும் ஆல்போல் பெரியதே
அதன் தோற்றங்கண்டு இல்லை
அடர்வான வேரின் துணைக்கொண்டு
அகிலத்தில் நிலைப்பு தன்மையால்
அறிவியல் ஆளுமைமிக்கது ஆன்மீகம்
அதன்பொருள் அறிந்தவரால் விளம்புதல்
ஆகச்சிறந்த நல்வழியைக் காட்டி
அகிலங்காக்கும் கவசமாய் மாறும்
வயதால் உயர்ந்தோர் என்றெண்ணம்
வருமெந்த மாந்தருக்கும் அரியதாய்
அறிவு இருக்குமாயின் நிலையில்லாது
சென்றுவிடும் வசித்தநிலை உலகில்.
--------- நன்னாடன்.