இசையோடு இசைந்தேன்

திசையெங்கும் தடையின்றி
அசைந்தோடும் உன் குழல்
இசைதனையே இடையின்றி
அசைபோடும் என் மனம்

தசைகொண்ட மேனியையும்
காந்த விசை போலீர்த்ததுவே
பசைபோன்று உள்ளமது
இசைந்து உன்னோடு ஒன்றிணைந்ததே

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (7-Aug-20, 10:40 am)
பார்வை : 50

மேலே