சங்கீதம்

சங்கீதம் காதல் சங்கீதம்
ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு
வகையான ராகங்கள் ,
சுகமானதோ, சுவையானதோ
காதலெனும் மேகத்தில்
சஞ்சரிக்கும் உள்ளத்திலே
மிதந்து வரும் ராகங்கள்
அவை தேவாமிர்தமும்
தெய்வீக சக்தியும் கண்டதே ,
காதலர் மனங்களில் உலாவரும்
அன்பின் ராகங்கள் அபூர்வமானதே ,
இந்த ரம்மியம் மிக்க காதலால்
இவ்வுலகம் உருவானது,
அன்று தொட்டு
இன்று வரை மட்டுமல்ல என்றென்றும்
அழியாத தொடரில் இவ்வினிய ராகங்கள் ,
காதலெனும் இதமான ராகங்களில்
மிதக்க வேண்டும் உள்ளங்கள் ,
இந்த ராகங்களின் அடிப்படையில்
உருவாகும் உயினங்கள் எண்ணிலடங்கா
இவ்வளப்பரிய இசையில்
மயங்காத மனிதரில்லை ,
வாழட்டும் காதல் சங்கீதம் வளரட்டும்.......

எழுதியவர் : பாத்திமாமலர் (7-Aug-20, 11:10 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : sangeetham
பார்வை : 79

மேலே