நீ வந்தாய் பௌர்ணமியாய்

புத்தகத்தைப் புரட்டினேன்
போரடித்தது மூடிவிட்டேன்
பூந்தோட்டத்தை பார்த்தேன்
பூவுமில்லை மொட்டும் இல்லை வெறும் இலைகள்
வான்தோட்டத்தை நிமிர்ந்து பார்த்தேன்
நிலவுக்கு இன்று ஓய்வுநாள்
அப்பொழுதினில்
புத்தகமாய் பூந்தோட்டமாய்
நீ வந்தாய் பௌர்ணமியாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-20, 9:19 am)
பார்வை : 93

மேலே