மதிமுகமே மதிமுகமே

( “நறுமுகையே நறுகையே.....” இருவர் - திரைப்படத்தில் இடம்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலின் இசையோடு
இந்த வரிகளை பாடி பாருங்கள். நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள்
குறை இருந்தால் கூறுங்கள்)

(( என் முயற்சி ))

மதிமுகமே மதிமுகமே நீயொரு புன்னகை தந்தாய்
மார்கழி நல்கிய குளிரினைப்போல் என்னுடல் சிலிர்த்திடச் செய்தாய்
நாணம் நிறைந்த விழிகளிலே நானும் வந்து வீழ்ந்திடவே
தாபம்தீர்க்கும் பார்வைதனை நீதா //
கோன்மகனே கோன்மகனே தாமொரு சேதியை கேளாய்
பிடியதன் பிடியையும் வென்றவனே பெண்மையின் உறுதியை உணர்வாய்
காதல் கரத்தால் உனைபிடித்து உள்ளம்உரசிட உனையணைத்து
என்னுள்உனை பிடித்துக்கொண்டேன் நாதா //

தென்றல் தீண்டிய உன்னுடல் தன் நிலைமறந்ததென்ன //
தீரம்கொண்டவுன் தீந்தமிழ் மொழிதனை அதுசுமந்து வந்ததென்ன
வனத்திலே நீஆடும்போதும் நதியிலே நீராடும்போதும் //
அணலாய் அலைந்தேன் அணையவில்லை
மழையாய் பொழிந்தாய் மலைத்தநிலை
மதிமுகமே மதிமுகமே நீயொரு புன்னகை தந்தாய்
மார்கழி நல்கிய குளிரினைப்போல் என்னுடல் சிலிர்த்திடச் செய்தாய்
காதல் கரத்தால் உனைபிடித்து உள்ளம்உரசிட உனையணைத்து
என்னுள்உனை பிடித்துக்கொண்டேன் நாதா
நாணம் நிறைந்த விழிகளிலே நானும் வந்து வீழ்ந்திடவே
தாபம்தீர்க்கும் பார்வைதனை நீதா

மெய்யும் மெய்யும் மெய்யுணர்வொன்றினை கண்டடைந்ததென்ன //
மெய்யாய் நானும் உன்தடமதிலே தொலைந்துபோனதென்ன
தினம் தினம் இன்பம் வார்த்தாய் திரவியம் வளர்ந்ததென்ன //
நாட்பூவாய் விரிந்த இதழழகியுனை
சங்கமம் நிறைந்தும் தொடர்வதென்ன
கோன்மகனே கோன்மகனே தாமொரு சேதியை கேளாய்
பிடியதன் பிடியையும் வென்றவனே பெண்மையின் உறுதியை உணர்வாய்
காதல் கரத்தால் உனைபிடித்து உள்ளம்உரசிட உனையணைத்து
என்னுள்உனை பிடித்துக்கொண்டேன் நாதா
நாணம் நிறைந்த விழிகளிலே நானும் வந்து வீழ்ந்திடவே
தாபம்தீர்க்கும் பார்வைதனை நீதா

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (11-Nov-20, 12:21 pm)
பார்வை : 119

மேலே