வேண்டியது வேண்டும்
எண்ணிய நல் எண்ணமெல்லாம்
வளர் தென்னையைப் போல் உயர வேண்டும்
உள்ளம் மகிழ செய்த உழைப்பு
செல்வ செழிப்பைக் கொடுக்க வேண்டும்
பிள்ளைகளின் பால் கொண்ட அன்பு
போற்றுதலுக்கு உரியதாய் இருக்க வேண்டும்
உள்ளம் தெளிய வைப்போர் உறவு
உயிர் உள்ள வரையில் தொடர்ந்திட வேண்டும்
அஞ்சதல் கெஞ்சுதலுக்கு ஆட்படாமல்
அமைதியான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்
ஆத்திரத்தினால் சிதறிய வார்த்தையால்
அன்பானோர் ஆதரவு விலாகாதிருக்க வேண்டும்
உடல் நோயினால் அவதியுறும் நாளில்
உதவுவதற்கு தூய மனம் நிறைந்தோர் வேண்டும்
ஏழ்மை என்ற துயர்மிக்க நிலையை
எந்நாளும் எட்டாமலிருக்க உடலில் வலிமை வேண்டும்
எதிலிருந்தும் எளிதில் வென்று எழ
எஃகு போன்ற உறுதியை இறையே நீ தர வேண்டும்
- - - - நன்னாடன்.